Your cart is empty.
புரட்சியாளன்
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | உலக கிளாசிக் கட்டுரைகள் | மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் |
தனித்து ஒதுங்கி இருந்த ‘குற்றம்’, இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்றுவரை தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசுக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். இப்படியானதொரு கொடூரமான சூழலில், ஆல்பர்ட் காம்யூவின் ‘புரட்சியாளன்’ நேரடியாக ஃபிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுக் கிடக்கும் நம் இருப்பைப் புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ளப் பேருதவியாக இருக்கும். வாழ்வு குறித்தும் மனிதம் படும் வாதை குறித்தும் நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் உள்ள தீவிரமான ஈடுபாட்டோடு கூடிய தேடல் உணர்வுதான், இத்தகையதொரு கடும் உழைப்பைக் கோரும் மொழிபெயர்ப்பு வேலைப்பாட்டினைச் சாதித்துக் காட்டியிருக்கிறது. முன்னுரையில் க. பஞ்சாங்கம் By one of the most profoundly influential thinkers of our century, The Rebel is a classic essay on revolution. For Albert Camus, the urge to revolt is one of the "essential dimensions" of human nature, manifested in man's timeless Promethean struggle against the conditions of his existence, as well as the popular uprisings against established orders throughout history. And yet, with an eye toward the French Revolution and its regicides and deicides, he shows how inevitably the course of revolution leads to tyranny. As old regimes throughout the world collapse, The Rebel resonates as an ardent, eloquent, and supremely rational voice of conscience for our tumultuous times. The book is translated into Tamil directly from French by Nagarathinam Krishna, who’s already well-known for his translation of Denis Collins’ ‘Marx’s Nightmare’ among many others.
ஆல்பர்ட் காம்யூ
ஆல்பர்ட் காம்யூ (1913 – 1960) சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள் எனப் பன்முக ஆளுமைகொண்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியப் படைப்பாளி, மெய்யியலாளர், குறிப்பாக அபத்தவாத அபிமானி. தம்முடைய படைப்புகள் எதுவென்றாலும் பொதுவில் மனிதர் வாழ்க்கையின் விளைவுகள் தரும் அபத்த விழிப்புணர்வின் துணையுடனும்; அந்த அபத்தத்திற்கு விடைதேட முனைந்தவர்போல இருத்தலுக்குப் பொருள்தரும் கிளர்ச்சியின் துணையுடனும் மானுடத்தைக் காண்பவர். 1957ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றபோது வயது 44. 1942ஆம் ஆண்டு வெளிவந்த ‘Le Mythe de Sisyphe’ என்ற நூல் தற்கொலை, இருத்தலை மையப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அபத்தவாதத்தை விவாதிக்கப் ‘புரட்சியாளன்’ (L’ Homme revolte) 1951ஆம் ஆண்டு வெளிவந்தது. நாவல்களில் ‘அந்நியன்’ அடைந்த புகழைக் கட்டுரைகளில் இந்நூல் பெற்றது; விவாதத்திற்கும் ஆய்வுக்கும் உரியது.
ISBN : 9789352440689
SIZE : 15.1 X 1.9 X 22.7 cm
WEIGHT : 528.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்