Your cart is empty.
சேரன்மாதேவி
சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் … மேலும்
சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். டாக்டர் வரதராஜுலு நாயுடு (1924) வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். பெரியார் (1925) இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாதார் இயக்கமானது முறுகி எழுவதற்குக் காலம் சமீபித்துவிட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன. சொ. முருகப்பா (1925)
ISBN : 9789381969915
SIZE : 13.8 X 1.7 X 21.5 cm
WEIGHT : 360.0 grams