Your cart is empty.
அ.கா. பெருமாள் எழுதிய 'தமிழறிஞர்கள்' என்ற நூலின் இரண்டாம் பகுதிதான் 'தமிழ்ச் சான்றோர்கள்.' இதில் 35 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. முந்தைய நூலைப் போலவே தமிழறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதியவை பற்றிய தகவல்கள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அக்காலத் தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பில்லை; 1894இல் ஜெர்மனியிலிருந்து ஸ்லேட் வந்தாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் 1920வரை மணலில் எழுதிப் பழகினர்; தமிழறிஞர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தினர்; அவர்களில் பலர் அச்சுப் புத்தகத்தின் வழி படித்தாலும் ஏட்டைப் படிக்கும் திறனும் பெற்றிருந்தனர் எனப் பல செய்திகளைப் போகிறபோக்கில் நூலாசிரியர் சொல்லிக்கொண்டே போகிறார். கடின உழைப்பில் உருவான நூல் இது.
ISBN : 9789355231147
SIZE : 14.0 X 1.5 X 21.5 cm
WEIGHT : 293.0 grams