Your cart is empty.
தாகத்தின் சுழல் காற்று
-மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் … மேலும்
-மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல்கின்றன.
வீழ்ச்சிகளிலிருந்து மறுபடி மறுபடி வலிய சிறகுகளோடு எழுகின்றன. வறட்சியின் அடியாழங்களில் கசியும் ஈரத்தைக் காட்டித் தருகின்றன.
பற்று, துறப்பு என்கிற இரு முரண்நிலைகளுக்கு இடையே முதிர்ந்த கவிபோல ஊடாடுகிறார் மிஸ்ரா. பெண்ணொருத்தியின் ஆத்மாவின் துடிப்பும் வேட்கையோடு சிறகடிக்கும் ஒரு பறவையின் துடிப்பும் இந்தத் தொகுதி முழுவதும் நம்மைத் தொந்தரவுசெய்கின்றது.
சீராக எழுந்து உச்சங்களில் நிலைகொள்கின்ற மிஸ்ராவின் கவிதைகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
சமீபகாலமாக, மலையகத்திலிருந்து (இலங்கை) பெண்களின் குரல்கள், படைப்புகள் காத்திரமாக வெளிவரத் தொடங்கி யிருப்பது மகிழ்வோடு கவனிக்கத்தக்கதும் ஆரோக்கியமானது மாகும்.
றஷ்மி
ISBN : 9789361109925
SIZE : 12.0 X 0.5 X 18.0 cm
WEIGHT : 0.6 grams













