Your cart is empty.
தாமோதரம்
தமிழ்ப் பதிப்பியலின் தலைமகன் தாமோதரனார். கறையானுக்கும் தமிழரின் மெத்தனத்திற்கும் இரையாகி அழியவிருந்த பழந்தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்துக் காத்தது மட்டுமன்று சி.வை. தாமோதரம் பிள்ளையின் சாதனை. செம்மாந்த … மேலும்
தமிழ்ப் பதிப்பியலின் தலைமகன் தாமோதரனார். கறையானுக்கும் தமிழரின் மெத்தனத்திற்கும் இரையாகி அழியவிருந்த பழந்தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்துக் காத்தது மட்டுமன்று சி.வை. தாமோதரம் பிள்ளையின் சாதனை. செம்மாந்த நடையில் இலக்கிய நயத்தோடு அவர் எழுதிய நீண்ட பதிப்புரைகளுக்கும் இலக்கிய வரலாற்றில் இடமுண்டு. புதிதாகக் கிடைத்துவந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைவதற்கான குறிப்புகளை அவர் முன்வைத்தார். சமகாலப் புலமை மரபோடு விவாத நோக்கில் அவர் தொடர்ந்த உரையாடல்கள், தமிழின் நவீனமயமாக்கத்தைப் புரிந்துகொள்ள வழிகோல்வதோடு வாசிப்புச்சுவையும் மிகுந்தவை. ‘தமிழ் மாது’ (தமிழன்னை), ‘பாஷாபிமானம்’ (மொழிப் பற்று), ‘தேசாபிமானம்’ (நாட்டுப் பற்று) ஆகிய தொடர்களை முதன்முதலில் கையாண்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளையே. ஒரு நாவலுக்குக் கருப்பொருளாக அமையக்கூடிய அளவுக்குச் சுவையானது இருபதாம் நூற்றாண்டின் முதல் நாளில் முடிவுற்ற அவருடைய வாழ்க்கை. சி.வை. தாமோதரம் பிள்ளையின் சில பதிப்புரைகளைப் புதியதாகக் கண்டெடுத்தும், அறியப்பட்ட பதிப்புரைகளுக்கு நம்பகமான பாடம் அமைத்தும் மீண்டுமொரு பதிப்புச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ப. சரவணன். ஆ. இரா. வேங்கடாசலபதி
ISBN : 9789386820037
SIZE : 13.9 X 1.5 X 21.4 cm
WEIGHT : 337.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பாரதியும் உ,வே,சா,வும்
-இருபதாம் நூற்றாண்டின் இருபெரும் தமிழாளுமைகள் பாரதியும் உ.வே.சா.வும். உலகச்
செவ்வியலிலக்க மேலும்