Your cart is empty.
தனிமைத் தளிர்
பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் … மேலும்
பெருமழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். உடன் எல்லோரும் பழங்களையும், காய்களையும், குச்சிகளையும் பொறுக்க வருவார்கள். சூடாமணியும் ஓர் ஆலமரமாய் இருந்தவர். காயாய், பழமாய், பூவாய், கனத்த விழுதுகளாய், ஆழமான வேர்களாய், கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய், பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய் சிதறிக்கிடக்கும் அவருடைய கதைகளை அவருடைய நண்பர்கள் பலர் இன்னும் பொறுக்கிக்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சியில் அமைந்த தொகுப்பு இது. ஓர் ஆலமரமாய் விழுதுகளை பூமிமேல் தழையவிட்டவர் சூடாமணி. பலருக்கு நிழல் தந்தவர். தன் கிளைகளில் கூடு கட்டிக்கொள்ள இடம் தந்தவர். அந்த ஆழ்ந்த வாஞ்சையும், மனித நேயமும் எல்லாக் கதைகளிலும் பொதிந்திருக்கும். எந்தக் கதையை யார் திறந்தாலும் அந்த உணர்வுகள் அவர்களை எட்டும். இக்கதைகளில் உள்ள அவருக்கே உரித்தான அந்த உணர்வுகள் அனைவரை யும் தொடட்டும். தொட்டு வளர்த்தட்டும். இருத்தட்டும்.
ஆர். சூடாமணி
ஆர். சூடாமணி (1931 - 2010) ஜனவரி 10, 1931இல் கலைஞரான கனகவல்லிக்கும் அரசாங்கத்தில் உயர் அதிகாரியான டி.என்.எஸ். ராகவனுக்கும் மூன்றாவது பெண்ணாகப் பிறந்தார் சூடாமணி. வீட்டிலிருந்தபடி கல்வி கற்றார். ஓவியம் மற்றும் இசை பயின்றார். ‘மகரம்’ என்ற பெயரில் எழுதிய பிரபல எழுத்தாளரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். 1954ஆம் ஆண்டு ‘பரிசு விமர்சனம்’ என்ற இவரது முதல் சிறுகதை பிரசுரமானது. 1957இல் ஆர்.சூடாமணி என்ற பெயரில் எழுதத் துவங்கியவர் எழுத்துலகில் தனக்கென்று ஓர் இடத்தை எந்த ஆரவாரமுமின்றி ஸ்தாபித்துக்கொண்டார். அதிக ஆர்ப்பாட்டமில்லாத, தெள்ளிய, கவித்துவமான நடையில் மனித உறவுகளின் சிக்கல்கள், அதன் ஆழங்கள், அவற்றில் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் பல்வேறு கட்டங்களில் சேர்ந்தும் விலகியும், நேசித்தும் வெறுத்தும், சிரித்தும் அழுதும் வாழும் வாழ்க்கை பற்றி எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர் சூடாமணி. 200க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சிறுகதைகளை சூடாமணி ராகவன் என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது (1959), தமிழ்நாடு அரசு விருது (1966), லில்லி தேவசிகாமணி விருது (1992), கலைஞர் மு. கருணாநிதி விருது (2009) என்று பல விருதுகளைப்பெற்றவர். 2010ஆம் ஆண்டு இவர் மறைந்தபோது தனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழை மக்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கு நன்கொடையாக அளித்திருந்தார்.
ISBN : 9789381969816
SIZE : 14.8 X 3.1 X 22.5 cm
WEIGHT : 801.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்