Your cart is empty.
தீக்கடல் கடைந்து திருமதுரம் - மலையாளத்தின் தந்தை எழுத்தச்சனின் வாழ்க்கைக் கதை
-மலையாளத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சனின் வாழ்க்கையை மையமாக … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: மா. கலைச்செல்வன் |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
-மலையாளத்தின் தந்தை என்று போற்றப்படும் எழுத்தச்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் சி. இராதாகிருஷ்ணன் எழுதிய வரலாற்றுப் புனைவு இந்த நூல்.
எழுத்தச்சனின் வாழ்க்கை என்பது மலையாள மொழி இன்றைய வரிவடிவில் உருவாகி அதில் இலக்கியங்கள் எழுந்த வரலாற்றோடும் அக்கால அரசியல், சமுதாயம், பண்பாடு, சமயம் முதலியவற்றின் வரலாற்றோடும் பிணைந்து கிடப்பது. அத்தகைய வரலாற்று நாயகனின் வாழ்வை எழுதும்போது இவையெல்லாம் ஊடும் பாவுமாக விளக்கம் பெற வேண்டும். அது இந்த நாவலில் சிறப்பாக அமைந்துள்ளது.
வரலாற்று ஆராய்ச்சி நூல்களின் அடிப்படையில் இந்தப் புனை கதையை நாவலாசிரியர் உருவாக்கியுள்ளார். எழுத்தச்சன் கல்வி கற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் அவர் வாழ்ந்த இடங்களுக்கும் நேரில் சென்று தகவல் திரட்டி எழுதியுள்ளார்.
இந்த புனைவை மொழிபெயர்த்த மா. கலைச்செல்வன் ‘கண்ணச ராமாயணம்’ என்ற தொல்மலையாள நூலை ஆய்வுசெய்து தமிழில் ஒலிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்றவர். அவருடைய மொழிபெயர்ப்பு மூலத்திலிருந்து விலகிச் செல்லாமல் தமிழ்ப் படைப்பைப் போல அமைந்திருக்கிறது.
ISBN : 9789361108648
SIZE : 14.0 X 3.5 X 21.0 cm
WEIGHT : 550.0 grams













