Your cart is empty.


தீட்டுத்துணி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் … மேலும்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் பதினான்கு கதைகள் இதில் உள்ளன. ‘அண்ணாவின் கதைகளைக் கொண்டு அக்கால நாடக உலகம், மேடைப் பேச்சு விஷயங்கள், வணிகர்களின் நடைமுறைகள், தமது இறுதிக் கட்டத்தில் இருந்த ஜமீன் பரம்பரை நடவடிக்கைகள், பணக்காரர்களின் வழக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் உள்ளிட்டவற்றை அறியலாம். அதற்கான தரவுகளாக இக்கதைகள் உள்ளன. இக்கதைகள் எழுதப்பட்ட காலத்துப் பெண்கள் நிலை இவற்றில் இடம்பெறுவதோடு பெண்கள் தொடர்பான அண்ணாவின் கருத்துகளையும் தருவிக்கலாம்’ என்று தம் விரிவான முன்னுரையில் குறிப்பிடுகிறார் பெருமாள்முருகன்
ISBN : 9788189945596
SIZE : 13.9 X 0.8 X 20.9 cm
WEIGHT : 182.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
தீட்டுத்துணி
இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி வெள மேலும்