Your cart is empty.
சாதி
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: பக்தவத்சலபாரதி |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் |
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
பெருமாள்முருகன்
இந்தியச் சாதி முறை தனித்துவமான ஒரு சமூக வடிவம். அதன் தோற்றம், நிலைபேறு, மாற்றம் ஆகியவை பற்றி அனைத்திந்தியத் தளத்தில் வைத்துப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் சுரிந்தர் ஜோத்கா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர்.
சாதியின் புறநிலை இயங்கியல் காலகதியில் மாறிவந்தாலும், அதன் அடிநிலைக் கருத்தியல் தளம் அந்த அளவிற்கு மாறவில்லை. இதனைப் பண்டைக் காலம், காலனியக் காலம், பின்காலனியக் காலம் ஆகியவற்றினூடாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
சாதி பற்றிய செவ்வியல் நூல்களின் பார்வை, கீழைத்தேயவியல் பார்வை, கோட்பாட்டு விவாதங்கள், கல்விப் புலங்களின் அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பார்வையை முன்வைக்கிறார் சுரிந்தர் ஜோத்கா.
ISBN : 9789355231444
SIZE : 139.0 X 6.0 X 214.0 cm
WEIGHT : 113.0 grams