Your cart is empty.
உணவே மருந்து
தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், … மேலும்
தெரிசனங்கோப்பு ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் டாக்டர் எல். மஹாதேவன் எழுதியுள்ள இந்த நூலில், அன்றாட வாழ்விற்குப் பயன்படும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, ஜூஸ், கஞ்சி போன்ற பழமை மாறாத மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள் 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலின் நோக்கம், நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துகள், மருந்துகள், பயன்கள் பற்றிப் பேசுவது. உடலில் எந்தக் குறை பாட்டுக்கு அல்லது நோய்க்கு என்ன உண்ண வேண்டும் எனும் அரிய தகவல்கள் அடங்கியது. This Ayurvedic health Book describes the preparation everyday healthy food items under 18 delicious headings.
டாக்டர் எல். மகாதேவன்
டாக்டர் எல். மகாதேவன் தினசரி கிடைக்கின்ற உணவுகளையும் அனுபவத்தின் வாயிலாகக் கிடைக்கப்பெற்ற அறிவையும் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது இந்த நூல். உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றின் தன்மைகளும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. உணவு வகைகளான பலவித சாதம், கூட்டு, பொடி, வற்றல், தொக்கு, ரஸம், தின்பண்டங்கள், கஞ்சி போன்றவற்றுடன் பல்வேறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அடை, தோசை, சப்பாத்தி, டீ, காபி போன்றவை குறித்த பயனுள்ள குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த உணவு வகைகளின் மருத்துவக் குணங்களும் அவை குணப்படுத்தும் நோய்களும் இதில் விளக்கப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேதத்தில் முறையான கல்வியும், அனுபவமும் கொண்ட மருத்துவக் குழுவினரால் தயாரிக்கப்பட்டது இந்த நூல்.
ISBN : 9788189945374
SIZE : 13.8 X 0.9 X 21.4 cm
WEIGHT : 205.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. மேலும்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்