Your cart is empty.
வாராணசி
வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் … மேலும்
வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன. பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இன்றைத் தொன்மைத்தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கிறது இந்நாவல்.
பா. வெங்கடேசன்
பா. வெங்கடேசன் எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கியவர்; மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம்வரை அங்கேயே வளர்ந்தவர். மனைவி, இரண்டு மகன்களுடன் பணி நிமித்தமாக இப்போது ஒசூர்வாசி. வாகனங்களுக்கான பிளாஸ்டிக் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரபல தனியார் தொழில் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் மேலாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், சிறு புதினங்கள், புதினங்கள் படைப்பாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை பதிப்பிக்கப்பட்டவையும் படாதவையும் படவிருப்பவையுமாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்புகள். புனைவிலக்கியத்தில் சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ் திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
ISBN : 9789388631136
SIZE : 13.7 X 0.9 X 21.3 cm
WEIGHT : 216.0 grams