Your cart is empty.


வாஸவேச்வரம்
நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | தமிழ் கிளாசிக் நாவல் | நவீனத் தமிழ் கிளாசிக் நாவல் |
நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை - கதாபாத்திரங்களை மையமாகக்கொண்டு, கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி, அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது. எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு.
கிருத்திகா
கிருத்திகா (1915 – 2009) இயற்பெயர் மதுரம் பூதலிங்கம். மும்பையில் பிறந்து, வளர்ந்த இவர் பள்ளியில் தமிழும் ஆங்கிலமும் பயின்றார். சுயமாக சமஸ்கிருதம், பிரெஞ்சு மொழிகளையும் கற்றார். பாரதியின் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ‘புகை நடுவில்’, ‘சத்யமேவ’, ‘புதிய கோணங்கி’ போன்ற நாவல்களையும் குழந்தைகளுக்காகத் தமிழில் ‘குட்டிப் பாட்டிக் கதைகள்’, ஆங்கிலத்தில் Children’s Ramayana, The Sons of Pandu நூல்களையும் எழுதியுள்ளார். நாடகங்களும் சிறுகதைகளும் பயண அனுபவங்கள் மற்றும் தென்னிந்தியக் கோயில் – கட்டடக் கலை பற்றிய கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
ISBN : 9788189945149
SIZE : 14.0 X 0.9 X 21.4 cm
WEIGHT : 229.0 grams
This unique novel begins and ends in the Harikatha style.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்