Your cart is empty.
வேதாளம் சொன்ன கதை
‘வேதாளம் சொன்ன கதை’ யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல். இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டு. அவை சுவாரஸ்யமானவை; எனினும் நேர்க்கோட்டில் நிகழாதவை. நாவல் களம் அனேகமாக … மேலும்
‘வேதாளம் சொன்ன கதை’ யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல். இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டு. அவை சுவாரஸ்யமானவை; எனினும் நேர்க்கோட்டில் நிகழாதவை. நாவல் களம் அனேகமாக ஒன்றுதான். ஆனால் கதைக்கேற்ப மாறும் வண்ணம் கொண்டது. கதைமாந்தரில் பெரும்பாலோர் முன்பே அறிமுகமானவர்கள்; எனினும் நிகழ்வுகளுக்கேற்ற விசித்திரப் போக்குகளை மேற்கொள்பவர்கள். கூறுமுறை யதார்த்தவாதமாகத் தென்படும்போதே அதைக் கடந்து முன்னகரும் இயல்பு கொண்டது. இயல்பானது என்று உணரும்போதே அதீதமாகும் மொழி. ஒரு கதை என்று உள்ளே புகும்போதே ஆயிரம் கதவுகளாகத் திறந்து பல கதைவெளிகளுக்கு இட்டுச்செல்லும் எழுத்து வன்மை. மேற்சொன்ன எல்லா இலக்கணங்களும் பொருந்தியிருக்கும் நிலையிலேயே புதிதான ஒன்றை, புதிரான ஒன்றை உள்ளடக்கியிருக்கிறது இந்நாவல். அது என்ன என்ற கேள்விக்குப் பதிலே ‘வேதாளம் சொல்லும் கதை.’
யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர் (பி. 1961) யுவன் சந்திரசேகர் (எம். யுவன்) பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற சிறு கிராமத்தில். வசிப்பது சென்னையில். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். மின்னஞ்சல்: writeryuvan@gmail.com
ISBN : 9788194302766
SIZE : 13.8 X 2.0 X 21.5 cm
WEIGHT : 437.0 grams