Your cart is empty.
விளம்பர நீளத்தில் ஒரு மரணம்
நவீன உலகின் சிக்கலை அதை விடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர் தமிழ்ப் பெண், இந்தியத் … மேலும்
நவீன உலகின் சிக்கலை அதை விடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியாயத்தின் சம்பவங்களும் அவற்றை விசாரிக்கின்றன; இச்சொல்முறை தமிழுக்குப் புதிது. காலகாலமாக மீட்டுருவாக்கப்படும் இந்தியப் புராணக் கதை யான அகலிகைக்கு இந்த நாவல் புதுமுகம் கொடுத்துள்ளது. சிங்கப்பூரைப் பின்னணியாகவும் அடையாளச் சிக்கலை மையமாகவும் கொண்டது இந்நாவல். ஒரு மேஜிசியனுக்கு நிகரான நுட்பத்தை சித்துராஜ் பொன்ராஜ் விவரிப்புமொழியாகக் கொண்டுள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தின் கதைசொல்லும் பெரும் போக்கிலிருந்து விலகி புதிய பாய்ச்சலை இந்நாவலில் அவர் நிகழ்த்தியுள்ளார்.
சித்துராஜ் பொன்ராஜ்
சித்துராஜ் பொன்ராஜ் (பி. 1973) சித்துராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) தமிழ், ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் கதை, கவிதை எழுதி வருகிறார். அவருடைய முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான ‘மாறிலிகள்’ தமிழ்ப் புனைவுப் பிரிவில் 2016ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசையும் அவருடைய முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி ‘காற்றாய் கடந்தாய்’ அதே ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய தமிழ்க் கவிதைப் பிரிவில் தகுதிப் பரிசையும் வென்றன. தமிழில் ‘பெர்னுலியின் பேய்கள்’ என்ற நாவலையும் இரண்டு சிறுவர் நாவல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘The Flag Party’ 2017ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. இவருடைய ஸ்பானியக் குறுங்கதைத் தொகுப்பு 2018 ஜனவரியில் வெளிவரவிருக்கிறது. மின்னஞ்சல்: sithurajponraj134@gmail.com
ISBN : 9789386820303
SIZE : 13.8 X 0.9 X 21.5 cm
WEIGHT : 234.0 grams