Your cart is empty.
எங்கேயும் எப்போதும்: எஸ்.பி.பி. நினைவலைகள்
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொ மேலும்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்ப மேலும்
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் மேலும்
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உ மேலும்
நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க சி மேலும்
தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர மேலும்
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படி மேலும்
-எல்லாப் பருவங்களுக்கும் எல்லாத் தருணங்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் எல்லா உறவு நிலைகளுக்கும் குரல் கொடுத்த கலைஞனைப் பற்றிய சொற்சித்திரங்கள்.
-'அவன் (கு.ப. ராஜகோபாலன்) எழுதியிருக்கும் கவிகள் 'கருவளையும் கையும்' என்ற தலைப்பில் 'மணிக்கொடி'யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி... படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம் போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது... உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை' என்று ந. பிச்சமூர்த்தி குறிப்பிடுகிறார். சிறுகதைத் துறையில் மட்டுமல்ல, நவீன கவிதையிலும் முன்னோடியாக விளங்குபவர் கு.ப.ரா.
1934இல் தொடங்கி 1944ஆம் ஆண்டு அவரது இறப்பு வரைக்கும் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். அவற்றைத் தொகுத்துக் 'கருவளையும் கையும்' என்னும் தலைப்பில் நூலாக்கம் செய்ய முயன்றார். அது வெளியாகியிருந்தால் தமிழ் நவீன கவிதையின் முதல் தொகுப்பாக விளங்கியிருக்கும். அவரது ஆசை ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறியுள்ளது. அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுக் கால வரிசைப்படி இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. பாட வேறுபாடு கொண்ட கவிதைகளின் இரு வடிவங்கள் அடுத்தடுத்து உள்ளன. முன்னுரைகள், பின்னிணைப்புகள், அகராதிகள், வாழ்க்கைக் குறிப்பு ஆகியவையும் முறையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
நவீன கவிதை முன்னோடி ஒருவரின் கவிதைகள் எவ்வகையில் வெளியாக வேண்டுமோ அவ்வகையில் செம்பதிப்பாக இந்நூல் உருவாகியுள்ளது.
நம் அன்றாட வாழ்விலிருந்து பண்பாட்டு அறிவுத் தளங்கள் வரையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் செயல்பாடு மொழிபெயர்ப்பு. பேச்சையோ எழுத்தையோ இன்னொரு மொழியில் தருவது எளிய செயல்பாடு அன்று. ஒவ்வொரு சொல்லும் தொடரும் பல்வேறு பொருட்கோடலுக்கு வழிகொடுப்பவை. குறிப்பிட்ட சொல் அல்லது தொடரை யார், எப்போது, எங்கே, என்ன நோக்கத்துடன் சொன்னார் அல்லது எழுதினார் என்பதைப் பொறுத்து அதற்குப் பல்வேறு பொருள்கள் உருவாகிவிடுகின்றன. முற்றிலும் மாறுபட்ட பொருள் தரும் மரபுத்தொடர்களும் சொலவடைகளும் பிரதியில் கலந்திருக்கின்றன. பண்பாட்டு அரசியல் சூழல்களும் நாடு, இனம், சாதி, மதம், பாலினம், வட்டாரம், காலம் முதலான பலவும் ஒரு பிரதியின் பொருளைத் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தும் இணைந்து மொழியாக்கத்தை வெளிச்சம் குறைவான இடத்தில் வழுக்குப்பாதையில் கைகளைக் கட்டிக்கொண்டு நடப்பது போன்ற அபாயகரமான சாகசமாக உணரச் செய்கின்றன.
மொழிபெயர்ப்பு மரபுகள், மொழியியல் பார்வைகள், மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள், தேவைகள் எனப் பல்வேறு கூறுகளைக் கவனத்தில் கொண்டு மொழிபெயர்ப்பு என்னும் மிகச் சிக்கலான புதிரை விடுவிக்க முயல்கிறார் பேராசிரியர் கே. தியாகராஜன். பண்டைய இலக்கியங்களின் மொழியாக்கத்திலிருந்து இன்றுவரையிலுமான மொழியாக்கங்களின் முறைமைகளையும் சவால்களையும் பல்வேறு எடுத்துக்காட்டுக்களை முன்வைத்து விவரிக்கிறார்.
மொழிபெயர்ப்பு தொடர்பாகத் தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது.
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே மேதை அவர்தான்.
சுந்தர ராமசாமி (ஆகஸ்ட் 2003, கல்கி நேர்காணல்)
"அவரே கம்போஸ் செய்கிறார்; இசைக்கருவிகளை ஒருங்கமைக்கிறார்; ஆர்கெஸ்ட்ரேஷனைச் செய்கிறார்; நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். இதையெல்லாம் உதவியாளர்கள் இல்லாமலும் நிறுத்துக் கடிகாரம் இல்லாமலும் செய்கிறார். ஆச்சரியம்!''
பண்டிட் ஹரி பிரசாத் சௌரஸ்யா
இளையராஜா வெறும் சினிமா இசையமைப்பாளர் அல்ல; அவர் முழுமையான ஓர் இசைஞர்.
அடூர் கோபாலகிருஷ்ணன்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.
சுகுமாரன்
பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.
யுவன் சந்திரசேகர்
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் சமூகம் அவர்களின் போராட்டக் குணத்தைக் கண்டு அஞ்சுகிறது. எனவே அவர்களின் நியாயமான குரல்கள்கூட ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றன. சமத்துவம் பேசும் பெண் ஆண்களின் மனதை அதிகம் புண்படுத்துகிறாள். சமத்துவம் குறித்த அவளுடைய ஒவ்வொரு சொல்லும் ஆணாதிக்கத்தின் மேல் சாட்டையடியாய் விழுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அவள் அடங்கப்பிடாரி, பஜாரி, சண்டைக்காரி.
ஜாதி, மதம், வர்க்கம், குடும்பம், அரசாங்கம் எனும் ஆணாதிக்க நிறுவனங்களைப் பெண்கள் கேள்விக்குள்ளாக்கும்போது ஆண்கள் நடுங்கிப்போகிறார்கள். இந்தப் புத்தகம் அதையே செய்கிறது. இந்தப் புத்தகம் பேசும் பெண்ணியம் நீங்கள் இவ்வளவு காலமாகப் பழகிய பெண்ணியக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டது. இது ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த உழைக்கும் வர்க்கப் பெண்ணின் குரல். கீழே இருப்பவர்கள் கத்தினால்தானே மேலே கேட்கும்? அது ஆதிக்கவாதிகளைப் புண்படுத்தவே செய்யும்.
அப்பா, சகோதரன், கணவன், சாலையில் நடந்து செல்லும் யாரோ ஒருவன் என என் வாழ்க்கையை யாரோ தீர்மானிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளிப்பட்ட எழுத்துக்கள் இவை. என் உடலையும் என் சிந்தனையையும் கட்டுப்படுத்தும் ஆணாதிக்க நிறுவனங்களுக்கு எதிராக உருவான எழுத்துக்கள் இவை.
ஆம். நான் சண்டைக்காரிதான். என் சமூகத்திற்காக, சக பெண்களுக்காக நான் சண்டை செய்தே ஆக வேண்டும். 'எனக்கு முன் ஒருத்தி செய்ததுபோல.
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை.
முன்னுரையில் இசை
நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க சிற்பியாகவும் இணையற்ற ஆசிரியராகவும் கலைத் துறைக்குப் பெரும்பங்காற்றியவர்.
ஓவியம் பயின்றவர்; எனினும் தனபால் தனது கலை ஊடகமாக ஏற்றுக்கொண்டது சிற்பத்தைத்தான். திராவிடக் கலை மரபையும் மேற்கத்திய நவீனத்தின் கூறுகளையும் இணைத்து அவர் உருவாக்கிய சிற்ப மரபு முன்னோடித் தன்மை கொண்டது. அவர் வடித்த ஒளவையார், இயேசு, பெரியார் சிற்பங்கள் திராவிடக் கலை மரபுக்குப் புதிய திசைகாட்டிகளாக அமைந்தன. சிற்பி என்ற அளவில் அவரது படைப்புச் சாதனைகள் தனித்துவம் கொண்டவை, நிகரற்றவை.
சிற்பி தனபாலின் வாழ்வையும் கலைப்பணியையும் அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு இந்நூல் நினைவுகூர்கிறது.
தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு மண்டலத்தின் யதார்த்தம் திரைப்படங்களில் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிலவும் சாதியின் கோரத்தன்மையை அதன் யதார்த்தத்துடன் பெருமாள் முருகனின் கதைகள் வழியாகவே நான் அதிகம் புரிந்துகொண்டேன்.
‘வறுகறி', 'மாப்பு குடுக்கோணுஞ் சாமீ' ஆகிய கதைகளைத் திரைப்படமாக உருமாற்றியதில் பெருமாள் முருகனின் பங்கும் அளப்பரியது.
சிறுகதைகளில் இடம்பெறும் உரையாடல்களை, விளக்கங்களை, மனிதர்களின் எண்ணவோட்டங்களைக் காட்சியாக மாற்றுவதென்பது சவாலானது. அது மிக லாகவமாகப் பெருமாள்முருகனுக்குக் கைகூடியிருக்கிறது சிறுகதையாகப் படித்தபோதிருந்த அதே அதிர்வு திரைக்கதையாகவும் படிக்கும்போது ஏற்படுவதென்பது அரிது. பெருமாள் முருகனும் தமிழும் அதை அழகாகச் செய்திருந்தனர். திரைமொழியிலும் அதே அதிர்வை இயக்குநர் தமிழ் ஏற்படுத்திக் கொடுக்க இந்த முப்பரிமாணத் தாக்கம் ஒரு இனிய அனுபவமாக எனக்கு இருந்தது. சேத்துமான் திரைப்படம் நீலம் புரொடக் ஷன்ஸுக்குப் பெரிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும்.
மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்கின்றன. இயற்கைச் சூழலை அனுசரித்து அவை தம்மைக் காத்துக்கொள்கின்றன.
அவை வளர்கின்றன. பரவுகின்றன. புலம்பெயர்கின்றன.
வனம் என்பவை மனிதர்கள் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத மாபெரும் புதிர். இயற்கையின் மாபெரும் கொடையாகிய வனம் என்பது உயிராற்றலின் அற்புதமான பொக்கிஷம். மனிதர்கள் உருவாக்கும் செயற்கை வனங்கள் இயற்கை வனங்களுக்கு முன் கால் தூசுக்குச் சமமானவை.
மரங்களின் வாழ்வை அறிதல் என்பது ஒருவகையில் இயற்கையின் பேரதிசயத்தையும் அசாத்தியமான ஒழுங்கையும் அறிதல். மரங்களின் மொழியைப் புரிந்துகொண்டால் இயற்கையின் மொழியை,
உயிரின் மொழியைப் புரிந்துகொள்ளலாம்.
முழுக்க முழுக்க மரங்களைப் பற்றியே பேசும் இந்த நூல் மரங்களைப் பற்றியது மட்டுமல்ல. மானுடம் தாண்டிய இவ்வுலகின் பெருவாழ்வைப் பற்றியது.
சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப்
பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை.
சாதியத்தின் வேர்கள் இந்து மதத்தில் ஆழமாக வேரோடியுள்ளதையும் அதன் கிளைகள்
சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் பரவியிருப்பதையும்
அம்பேத்கர் உரிய ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார். பாலினம் சார்ந்தும் அதே
விமர்சனத்தை முன்வைக்க முடியும் என இந்த நூலில் வந்தனா சொனால்கர் வாதிடுகிறார்.
இந்து மதம் சாதியத்தில் மட்டுமின்றி ஆணாதிக்கத்திலும் ஊறியது என்று கூறும் வந்தனா,
இந்து மதம் சார்ந்த நூல்களையும் அதன் சமூக மரபுகளையும் பழக்க வழக்கங்களையும்
ஆதாரமாகக் கொண்டு தன் பார்வையை முன்வைக்கிறார். சாதிய அடுக்கிலும்
பொருளாதார நிலையிலும் உயர் நிலையில் உள்ள பின்னணியைச் சார்ந்த வந்தனா, தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன் வைத்து இந்த விசாரணையைத்
தொடங்குகிறார். பக்தி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் ஆணாதிக்கம் இங்கே நுட்பமாகவும் ஆழமாகவும் நிலைபெற்றிருப்பதை நிறுவுகிறார்.
பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த நூல் இந்து மதம் குறித்த கூர்மையானதும் காத்திரமானதுமான விமர்சனத்தை முன்வைத்துச் சமகால அரசியல் உரையாடலுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.
இன்றைய காலகட்டத்தில் “உயர்” சாதியைச் சேர்ந்த பெண்ணியவாதியாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்த தன்வரலாற்றுத் தன்மை கொண்ட துணிச்சலான விசாரணை இந்த நூல்
உலகில் 13 ஆசிய நாடுகளில் யானைகள் இருக்கின்றன என்றாலும் யானைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்தியாவில்தான். சுமார் 30,000 யானைகள் இங்கு வாழ்வதாகக் கணிப்பு. இந்த நூல் போர் யானைகளைப் பற்றியது. ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக யானைகள் ஆசியாவின் பல போர்க்களங்களில் இயங்கின.
போரில் இவை முக்கியப் பங்காற்றின. யானைகளின் சிறப்பையும் தேவையையும் உணர்ந்திருந்த அரசர்கள், யானைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்று உணர்ந்திருந்தார்கள் அரசர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான தொடர்பை வரலாற்று ஆதாரங்களுடனும் உரிய தர்க்கங்களுடனும் இந்த நூல் விவரிக்கிறது.
வரலாற்று ஆய்வாளர் தாமஸ் டிரவுட்மன்னின் அழமான ஆய்வின் விளைவாகப் பிறந்த இந்த நூல் இந்திய யானைகளையும் அரசர்களையும் பற்றிய அரிய, சுவையான பல செய்திகளையும் பார்வைகளையும் தருகிறது.