Your cart is empty.
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)
-
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத் மேலும்
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆக மேலும்
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் மேலும்
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறா மேலும்
தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின மேலும்
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், மேலும்
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது மேலும்
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர மேலும்
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில மேலும்
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. அதற்கேற்ப, மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின. ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது, மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது. ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை, இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது.
அந்தக் காலகட்டத்தில், புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள், தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும், அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள், தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும், பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய், பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும், வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும், ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல்."
ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம்.
ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது. நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன.
தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி, மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம்.
ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது.
இசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா. வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள், கச்சேரிக்கான கட்டமைப்பு, பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார்.
கலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் கொண்டிருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறார். இசைக்கும் இறைமை நிகழ்களம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார். கர்னாடக, இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார். நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார். இசை வரலாறு குறித்த சுருக்கமான
சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார்.
கிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது. அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறையியலை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான்.
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுசெய்கிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இருக்கவில்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறைக்காரியான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?
இயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல்.
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள்? பசு, ஆடு, எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து, ஒத்திசைவுடன் வினையாற்றி, ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது? ஓசையை உருவாக்குவது யார்? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தாள கதியை உள்வாங்குவதிலில்லை. தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதை உள்வாங்குகிறார். அது வெறும் ஓசை அல்ல. வாசிப்பவரின் விரல்களுக்கும் விலங்குகளின் தோல்களுக்கும் இடையிலான உறவு. வாசிப்பவர் ஒவ்வொரு முறை புதிய கருவியில் வாசிக்கும்போதும் அந்தக் கருவிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு உருப்பெறுகிறது. வாசிப்பவர் மிருதங்கத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே மிருதங்கம் செய்பவர் முறுக்குவது, இழுப்பது, திருகுவது, உடைப்பது, நசுக்குவது, கழுவுவது, வெட்டுவது, இணைப்பது ஆகியவற்றைச் செய்து பல்வேறு இழைகளையும் வண்ணங்களையும் வடிவங்களையும் ஒலிகளையும் ஓரிடத்தில் இணைக்கிறார். மிருதங்கம் செய்பவர் மன்மதன்போல. அவர் இறந்தவற்றையும் உயிரோடு இருப்பவர்களையும், உயிரற்றதையும் செயற்கையான பொருள்களையும் புரிந்து கொள்பவர். இவற்றை இணைப்பதற்கான வழியை அவர் கண்டறிகிறார். அவர் மிருதங்கத்தின் தாளத்தைத் தன் கைகளால் பார்க்கிறார். அறிகிறார், உணர்கிறார். அவர் அதில் முதல் தட்டு தட்டும்போது மிருதங்கம் பிறக்கிறது.
தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. ஓர் எழுத்தாளர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துகளில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது.
நவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி. ஜானகிராமன் நூற்றாண்டில் வெளியாகும் இந்த நூல், இலக்கிய வாசகர் தனது விருப்பத்துக்குரிய எழுத்தாளருக்குச் செலுத்தும் நன்றிக்கடன். பின் தலைமுறை இலக்கியவாதி தனது முன்னோடிக்குப் படைக்கும் கைம்மாறு.
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் பிரக்ஞையின் பிம்பங்களும் மனவெளியின் இருள்மூலைகளும் நனவிலிப் படிமங்களும் யதார்த்தத்தின் புறவுருவில் வெளிப்படுகின்றன. சமகால வாழ்வையும் மனிதர்களையும் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களையும் புனைவின் குதூகலத்துடன் துடிப்பான மொழியில் கதைகளாக்கித் தருகிறார் பெருந்தேவி.
ஒன்றரை வரிகளுக்குள் குறளை எழுதியது பெரிய சாதனை அல்ல. அந்த வரிகளுக்குள் கடலுக்கொப்பான உள்ளடக்கத்தைப் பொதிந்து தந்ததே வள்ளுவரின் சாதனை. அத்தகைய குறுகத் தரித்த கதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். வாசிப்பின்பத்திற்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் பின்நவீனத்துவக் கதைகள் இவை.
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பனிவெளிகள், லாமா மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயணமாக இந்த நாவல் விரிகிறது. குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்பதாகத் தோற்றம் தரும் நாவல் தத்துவ விசாரமும் பூடகங்களும் குறியீடுகளும் கொண்ட வலைப்பின்னலைத் தனது ஆழத்தில் கொண்டுள்ளது. பனிபடர்ந்த இமயமலையோடு பௌத்த மடாலயங்களின் பின்னணியில் இவால்ட் ஃப்ளிஸர் நெய்யும் புனைவில் அய்ரோப்பியத் தத்துவத்துடன் இந்தியத் தத்துவ மரபும் பௌத்தத் தாந்திரீகமும் மெல்லிய மோதலை நிகழ்த்தியபடியிருக்கின்றன. தத்துவத்தைப் பொதிந்துவைத்தும் சுவாரஸ்யமாகக் கதைசொல்ல முடியும் என்பதை மெய்ப்பிக்கும் இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டதும் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அதிகம் வாசிக்கப்பட்ட ஸ்லோவேனிய நாவலுமாகும்.
‘மந்திரவாதியின் சீடன்’ அடிப்படையில் மிக சுவாரஸ்யமான நாவல். இதில் ஆன்மீகத் தேடல் சாகசப் பயணமாக விரிகிறது. துப்பறியும் நாவலுக்கான வேகத்தோடு மிக ஆழமான கருத்தாக்கங்களை வெளிப்படுத்தும் பக்கங்கள் துள்ளிக்குதித்தபடி விரைகின்றன. விநோதமான மனிதர்கள், ஞானிகள், வியப்பூட்டும் சடங்குகள் இவற்றோடு இமயத்தின் மடியில் நாவல் அசதாவின் அற்புதமான, சலிப்பேற்படுத்தாத தமிழாக்கத்தில் நகர்ந்து செல்கையில் மயிர்க்கூச்சம் எடுத்து குளிர் சூழ்ந்துகொள்கிறது.
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு. சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்நாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது. நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது. நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல, படைப்பு என்ற நிலையிலும் ‘பிராப்ளம்ஸ்கி விடுதி' முற்றிலும் ஒரு புதிய முயற்சி.
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும், பறந்து போய்விடும். அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை.