Your cart is empty.
தாகங்கொண்ட மீனொன்று - ரூமி
-
-போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் மேலும்
மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல் மேலும்
தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற மேலும்
சுஜாதா செல்வராஜின் இந்தக் கதைகள் பெண்களின் நடைமுறை வாழ்க்கையின் அவலங்களைக் கூறுபவை. பெண்களின் வாழ மேலும்
விலங்குகளுக்குச் சிகிச்சை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் கால்நடை மருத்துவர் நோயல் நடேசன். ஆழ் மேலும்
-நவீனத் தமிழக உருவாக்கத்தின் பின்புலத்தில் சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஆராயும் கட்டுரைகள் இவை. தற்காலத்தைப் புரிந்துகொள்வதற்குக் கடந்தகாலத்தை விமர்சன நோக்கோடு பார்க்கவேண்டும் என்பதை வற்புறுத்தும் பார்வை இவற்றின் ஊடுசரடு. காப்பியும் புகையிலையும் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்ட முறை; திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த அரசியல்; பாரதியின் எழுத்து வாழ்க்கை பற்றிய சமூகவியல் நோக்கு; கருத்துப் படங்கள், பகடி ஆகிய கலை வடிவங்கள் தமிழ் மரபில் பெறும் இடம் முதலானவை இந்நூலில் ஆராயப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரை என்றால் சாரமற்றிருக்கும் என்ற நினைப்பை முறியடித்து, சுவையும் விறுவிறுப்பும் மிக்க நடையில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. ஆய்வுலகத்தைத் தாண்டிப் பரவலான வாசக கவனத்தைப் பெற்ற நூலின் புதிய பதிப்பு இது
-போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது.
-கவிஞர் என்ற தொழில்நெறியாளர் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறார். இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன. -ஷங்கர்ராமசுப்ரமணியன் ‘அவ்வளவு பெரிய மலைகளைப் பார்க்கும் சின்னக் கண்களுடன்’ சஹானாவாக வேண்டும்; அன்றாடங்களின் வழமைகளை உதறி சஹானாவைப்போல ஒரு மீனாக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகின்றன இத்தொகுப்பைப் படித்தால். சூழலியலுக்கும் சஹானாவுக்கும் ‘பூனையின் மீசை’ அளவுக்குக்கூட இடைவெளி இல்லை. எல்லாமுமாக அவள் மாறிப்போவது அற்புதமாக இருக்கிறது. சஹானாவின் கவிதைகள் வழியாகக் கேட்பது பலநேரம் ஒரு குழந்தைமையின் தூய இசைக்குரல், சிலநேரம் தேர்ந்த தாயின் மெல்லிய கேவல். உண்மையில் சஹானாவின் அந்தச் சின்னக் கண்கள் வழியாக இந்தப் பெரிய வாழ்க்கையை, இயற்கையைப் பார்க்க வேண்டும். இன்னும் நிதானமாக ஒரு பூனையைப்போல வாசிக்க வேண்டும் மறுபடியும்... மறுபடியும்... -சந்தோஷ் நாராயணன் - ஓவியர்
-நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்குக் கொண்டுவந்தவர் அம்பை. இந்தக் கதைகள் உறவுகளால், போராட்டங்களால், கசப்புகளால், தனிமைகளால், அபூர்வமான பரவசங்களால், விம்மல்களால், கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிறும் சமூகத்தவர்களால், இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால், இன்ன பிறவற்றால் ஆனது. இந்தக் கதைகளில் கதைசொல்லி சிறுமியாக, மாணவியாக, களப்பணியாளராக, வளர்ந்த மகளாக, மத்திமவயதை உடையவளாக, ‘மௌஸிஜியாக, தீதியாக’ பல வயதுகளில் வருகிறாள். கதைகளுக்குள் ஊடாடி வரும் சங்கீதமும் பெண்களுக்குள் நிகழும் உறவில் வெளிப்படும் இசைமையும் தாளலயத்தோடு வெளிப்பட்டிருக்கிறது. பெரிய அலையாகவும் பிரம்மாண்டமானதாகவும் நுரையாகவும் பின் கூடிவந்து சேர்வதாகவும் பிறகு குலைந்து போகக்கூடியதாகவும் மீண்டும் எழக்கூடியதாகவும் மூழ்கடிக்கக்கூடியதாகவும் தூக்கி எறியக்கூடியதாகவுமான ஆக்கங்களைக் கொண்ட அம்பையின் மொத்த புனைகதைகளின் உலகம் இது.
-தேவேந்திர பூபதியின் கவிதைகள் உடனடிச் சமன்பாடுகளின் வழி வாழ்வுபற்றிய அவதானங்களை முன்வைப்பவை. தேர்ந்த சொற்களால் உருவக மொழியில் எழுதப்பட்டவை. நவீன கவிதை தனக்கென்று உருவாக்கிவைத்திருக்கும் மொழியில் பேசுபவை. இடையிடையே மரபின் தொனியிலும் ஒலிப்பவை.
கருத்துகளைக் காட்சிகளாக உருமாற்றித் தரும் முனைப்பு அதிகரிக்கையில், கவிதானுபவத்தில் செறிவும் செழுமையும் கூடுகின்றன. கவிதைக்குள் தானாகச் சொற்சிக்கனம் சேருகிறது. இவை நிகழும்போது சிறந்த கவிதைகள் உருவாகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் அதற்கான சான்றுகள்.
யுவன் சந்திரசேகர்
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன; ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்கிறதா என்று தேடுவதுதான் தன்னைத் தேடும் பயணம்.
மனிதர்களிடம் தனிமை மீதான அச்சமும் வருத்தமும் மாறி, அதன்மீது விருப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆழமான, எல்லையற்ற உறவின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. என்ன தேடுகிறோமென்று தெரியாமலேயே எதையோ தேடி அலைகிறோம். இந்தக் கதையின் சித்தார்த்தனும் அப்படி எதையோ தேடிப் புறப்படுகிறான். அந்த சித்தார்த்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றான். இந்த சித்தார்த்தன் காதல், காமம், செல்வம், எல்லாம் துறந்து இமயம் சென்றாலும் காதல் அவனைத் துறப்பதாக இல்லை.
அதிலிருந்து மீண்டு தன்னைக் கண்டுகொள்கிறானா இந்த சித்தார்த்தன்? எல்லாம் துறந்து செல்லும் சித்தார்த்தர்கள் புத்தராகிறார்களா?
கன்னடத்தில் சதீஷ் சப்பரிகே எழுதிய இந்த நாவலை, மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற கே. நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல்கின்றன.
வீழ்ச்சிகளிலிருந்து மறுபடி மறுபடி வலிய சிறகுகளோடு எழுகின்றன. வறட்சியின் அடியாழங்களில் கசியும் ஈரத்தைக் காட்டித் தருகின்றன.
பற்று, துறப்பு என்கிற இரு முரண்நிலைகளுக்கு இடையே முதிர்ந்த கவிபோல ஊடாடுகிறார் மிஸ்ரா. பெண்ணொருத்தியின் ஆத்மாவின் துடிப்பும் வேட்கையோடு சிறகடிக்கும் ஒரு பறவையின் துடிப்பும் இந்தத் தொகுதி முழுவதும் நம்மைத் தொந்தரவுசெய்கின்றது.
சீராக எழுந்து உச்சங்களில் நிலைகொள்கின்ற மிஸ்ராவின் கவிதைகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
சமீபகாலமாக, மலையகத்திலிருந்து (இலங்கை) பெண்களின் குரல்கள், படைப்புகள் காத்திரமாக வெளிவரத் தொடங்கி யிருப்பது மகிழ்வோடு கவனிக்கத்தக்கதும் ஆரோக்கியமானது மாகும்.
றஷ்மி
தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் வாழ்வு நவீன தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகவில்லை. அந்த வெளியில் தற்போது புத்தம் புதிதாகப் பிரவேசிக்கிறார் ஜார்ஜ் ஜோசப். இவரது கதைகள் வலுவான சம்பவங்களைக் கொண்டவை. அந்தச் சம்பவங் களைக் கதைகளாக்கும் கலைத்திறனும் மொழி ஆளுமையும் ஜார்ஜுக்கு இருக்கின்றன. எந்தக் கதையையும் குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் மட்டும் சொல்லாமல் கூடியவரையில் பலரது கோணங்களையும் கொண்டுவந்துவிடுகிறார். அவ்வகையில் இவரது கதையாடல் இயல்பாகவே பன்முகத்தன்மை பெற்றுவிடுகிறது. இத்தொகுப்பில் உள்ள மூன்று குறுநாவல் களும் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதோடு சமகால வாழ்வின் பரிமாணங்களையும் உணர்த்துகின்றன.
சுஜாதா செல்வராஜின் இந்தக் கதைகள் பெண்களின் நடைமுறை வாழ்க்கையின் அவலங்களைக் கூறுபவை. பெண்களின் வாழ்க்கையைத் தனித்துக் காணாமல் மனித வாழ்வின் பரந்த பின்னணியில் வைத்துப் பார்க்கிறார் சுஜாதா. குறிப்பிட்ட ஒரு சோகத்தைக் கூறும்போது, அதன் பின் உள்ள வரலாற்றுச் சோகத்தையும் பார்க்கவைக்கிறார்.
சுஜாதா அடிப்படையில் கவிஞர். அவருடைய கவித்துவச் செறிவு கதைகளைக் கச்சிதமாகக் கட்டமைக்க உதவுகிறது. பல்வேறு அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்லும் இவருக்குச் சிலவற்றைச் சொல்லாமல் விடுவதன் முக்கியத்துவமும் தெரிந்திருக்கிறது. தன் படைப்புத்திறனில் நம்பிக்கை உள்ளவர்களாலேயே சில விஷயங்களைச் சொல்லாமலேயே உணர்த்த முடியும். அத்தகைய நம்பிக்கை உள்ள படைப்பாளி களில் ஒருவர் சுஜாதா செல்வராஜ்.
விலங்குகளுக்குச் சிகிச்சை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் கால்நடை மருத்துவர் நோயல் நடேசன். ஆழ்ந்த மருத்துவ அறிவும் அனுபவச் செழுமையும் நுட்பமான அவதானிப்பும் மனோபாவங்களைப் படிக்கும் கூர்ந்த நோக்கும் இணைந்த பார்வை கொண்டவை இவரது நூல்கள். சிக்கலான சிகிச்சை முறைகளைக் கூடப் போதுமான அளவிலும் எளிமையாகவும் விவரணை செய்கிறார். அதாவது ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு மனோபாவம் கொண்ட மனிதரைச் சந்திக்க முடிகிறது. வீட்டு விலங்குகளின் இயல்புகளும் அவை மனிதருக்கு ஆதரவாக இருக்கும் நிலையும் பின்னணியில் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழில் அனுபவக் கட்டுரைகளுக்குக் கிட்டத்தட்ட நூறாண்டு வரலாறு உண்டு. அதில் கால்நடை மருத்துவர் ஒருவரின் அனுபவம் இவ்வகையில் பதிவான தில்லை. ஆகவே இக்கட்டுரைகளே முன்னோடி என்று சொல்லலாம்.
- பெருமாள்முருகன்
செல்லப் பிராணிகள் உங்களிடம் பிரதிபலன் பாராத அன்பைச் செலுத்துகின்றன; எதிர்பார்க்கின்றன. அவற்றின் உலகம் உங்களின் உலகிலிருந்து தூரமானது; அந்த நிலவைப் போல. நோயல் நடேசன் நம்மை அங்கு கூட்டிச்செல்கிறார்.
பக்கத்து வீட்டில் நடப்பதை அறிய விரும்பும் மனோபாவம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எவரும் ஒரு கால்நடை மருத்துவரின் வீட்டை எட்டிப் பார்த்ததாக நினைவில்லை. இந்தக் கால்நடை மருத்துவரின் உலகத்திற்குள் உங்களை வரவேற்கிறேன்.
- மா. கார்த்திக்