Your cart is empty.
Wild Girls, Wicked Words
-
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவ மேலும்
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியி மேலும்
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். க மேலும்
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் பு மேலும்
சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப மேலும்
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின மேலும்
‘நேர நெறிமுறை நிலையம்’, துருக்கிய மொழியில் பதிப்பிக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பிறகுதான் உலகின மேலும்
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்கா மேலும்
காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத் மேலும்
அனுபவத்தைக் கவிதை படிமமாக்குகிறது. புனைகதை வரலாறாக்குகிறது என்பது ஓர் இலக்கிய அளவீடு. இவ்விரு அளவீட்டிலும் கைவரிசை காட்டுபவர் பெருமாள்முருகன். இது அவரது நான்காவது கவிதைத் தொகுப்பு. சின்னக் குத்தல், கூரிய விமர்சனம், குழந்தைமையின் ஏக்கம், குழந்தை உலகம் பற்றிய வியப்பு, இயற்கை இழப்பு, இயற்கை மீதான பரிவு, சிறு பொழுதுகளில் முடிவடையும் காலம், அநாதி காலத்தின் நொடிப் பொழுதுகள், அரசியல் நக்கல், அரசியல் கரிசனம் என்று அனுபவங்களின் வெவ்வேறு நிலைகளை இந்தக் கவிதைகளில் முன்வைக்கிறார். அதுவும் கனவு கனியும் தருணங்களின் படிமங்களா.
சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியில் உள்ளவை. அழகாகவும் எதிர்ப்பாகவும் வியப்பாகவும் சிக்கலாகவும் தனிமையாகவும் நமது காலத்தின் அபத்தம் உருவம் கொள்கிறது. ‘வாசிக்கும்போதோ எழுதும்போதோ அல்லது சிந்திக்கும்போதோ ஒரு கவிஞன் கட்டாயம் மூடநம்பிக்கையில் வாழ்பவராக இருக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொள்ளும் ராணி திலக் இந்தக் கூற்றின் மூலம் கேள்விக்குட்படுத்துவது வாசகனின் இருப்பை; காலத்தின் நகர்வை.
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவு கண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது. இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது. பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.
கட்டணம் வசூலிக்கிற கைடுகள் காட்டாத இடத்தில்தான், பார்க்கப்பட வேண்டியவைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்தவர் கவி இசை. யாரும் பார்க்காத, அதிகம் பார்க்காத மலை முகடுகளை, அருவிகளைக் காட்டுகிறார் . . . ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப் பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசையுடையது. ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே. எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும். யாரைப் போலவும் அவர் எழுதவில்லை. இசை, இசையைப் போல எழுதுகிறார். அதனாலேயே, தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார். பிரபஞ்சன்
சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப்பதினைந்து கவிஞர்கள் சமகால தமிழ்க்கவிதையை உள்ளடக்கத்தின் பழம்பாசியிலிருந்து அகற்றி, அதேசமயம் தொன்மரபின் தொடர்ச்சி கெடாமல் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இது ஒரு கவிதை இயக்கமாகத் தமிழில் நடந்தது. உலகின் எந்தச் சிகரத்திலிருக்கும் கவிஞனோடும் சம அந்தஸ்துக்கும் மேலே உறவுகொள்ளும் தகுதி கொண்டது சமகாலத்தின் இந்த மாற்றம். இதன் சுவடுகளால் நிறைந்தவை தேவேந்திரபூபதியின் கவிதைகள். அன்றாட நிகழ்வுகளில் சகலவிதமான அனுபவங்களையும் ஆன்மீகத் தளத்திற்கு நகர்த்த இக்கவிதைகள் முயற்சி செய்கின்றன. புற தளங்களின், அலங்காரங்களின் பாசாங்குகளைக் கடக்கவும், அன்பின் ஸ்தூல வடிவை முன் நகர்த்தவும் எத்தனிக்கும் இவரது கவிதைகள்; ‘அன்பு வெகு தூரத்திலிருப்பது! வழியெங்கும் தடைகள்’ என்பதைக் கண்டுபிடிக்கவும் செய்கின்றன. புற உலகின் பற்றுதல்களை அன்பின் கரத்தால் புறந்தள்ளுதலின் மொழி உருவமே இந்த ‘நடுக்கடல் மௌனம்.’ லக்ஷ்மி மணிவண்ணன்
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை. சில புதிரானவை. சில மர்மமானவை. சில வெளிப்படையானவை. சில ரகசியமானவை. சில வினோதமானவை. சில அபத்தமானவை. சில இயல்பானவை. சில பிரகாசமானவை. நவீன மனிதனைப் போன்று அதிநவீனமானவை இந்தக் கவிதைகள். விரிவான களங்களிலும் மாறுபட்ட காலங்களிலும் வேறுபட்ட பார்வைகளுடனும் தனித்துவமான கூறல் முறையிலும் துணிச்சலான சோதனை நோக்கிலும் உருவான இந்தக் கவிதைகள் ஒரு முதிர்ந்த கவிஞரின் பக்குவப்பட்ட இளமைக்குச் சான்றாக நிற்கின்றன.
தமிழ் இலக்கண ஆய்வை வரலாற்றுச் சமுதாய மொழியியல் தளத்திற்கு விரிக்கும் முயற்சி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரசோழியத்தையும் ஆந்திர சப்த சிந்தாமணியையும் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளுக்குக் காரணமான சமூக, அரசியல், வரலாற்றுக் கூறுகள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சமஸ்கிருத இலக்கண மரபு இவ்விரு இலக்கணங்களின் உருமாதிரியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இரண்டு இலக்கணங்களுமே அம்மரபிலிருந்து வேறுபடும் தன்மை ஒப்பீட்டில் தெளிவாக வரையறுத்துக் கூறப்படுகின்றது. இவ் வரையறையில் வெளிப்படும் மணிப்பிரவாளம் பற்றிய சிந்தனைகளை மலையாள மொழியின் முதலாவது இலக்கணமான லீலாதிலகத்தோடும், கன்னட மொழியின் முதலாவது இலக்கணமான கவிராஜமார்க்கத்தோடும் ஒப்பிட்டு, புறக்கட்டமைப்பில் இவற்றிடையே ஒற்றுமை இல்லையென்றாலும் அணி மற்றும் யாப்பியல் கருத்துக்கள் பொதுவாக அமைவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலக்கண ஆய்வில் புதிய தடம்பதிக்கும் நூல்.
சு. இராசாராம்
‘நேர நெறிமுறை நிலையம்’, துருக்கிய மொழியில் பதிப்பிக்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பிறகுதான் உலகின் பரந்த பார்வைக்கு வந்திருக்கிறது. இன்றைய நவீன அதிகார வர்க்க அரசுகளின் இலக்கற்ற ஆட்சிமுறையை நையாண்டி செய்யும் இந்நாவல் ஒரு விசித்திரமான கற்பனைக் கதம்பம். இதன் மையக் கதாபாத்திரமான ஹய்ரி இர்டால் ஒரு கதாநாயகனிடம் எதிர்பார்க்கப்படும் எந்த குணாம்சமும் இல்லாதவன் என்றாலும் இவனுடைய பாத்திரப் படைப்பு வாசகனை வசீகரிக்கவே செய்கிறது. கடிகாரங்கள் காட்டும் நேரத்தைத் துல்லியமாக நெறிப்படுத்துவதன் மூலம் சமுதாயத்தையே கட்டுப்படுத்தலாம் எனும் சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்படும் நேர நெறிமுறை நிலையமும் ஹய்ரி இர்டாலுமாகச் சேர்ந்து மரபும் நவீனமும் முரண்படும் தருணங்களை நகைச்சுவை ததும்ப வாசகச் சிந்தனைக்கு விவாதப் பொருள் ஆக்குகிறார்கள். தன்பினாரின் கதையாடல், காலத்தை மத்தால் கடைவதுபோல் முன்னும் பின்னுமாக அலைக்கழித்து அனுபவ உண்மை எனும் வெண்ணெயைத் திரள வைக்கிறது.
படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும் கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரப் படைப்பாளியின் உன்னதப் படைப்பு இந்த நாவல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில், தனிமையுணர்வும் சஞ்சலமும் அன்புக்கான ஏக்கமும் கொண்ட ஒருவனின் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்கிறது இந்நாவல். வாழ்க்கையின் சந்தோஷங்களையும் துக்கங்களையும், ஆச்சரியங்களையும் ஏமாற்றங்களையும், குதூகலத்தையும் விரக்தியையும் வஞ்சனையற்று பதிவுசெய்யும் தன்பினார், ஒட்டாமான் அரசின் வீழ்ச்சியோடு அநாதரவாகிப்போன அதன் கலை விழுமியங்கள் பற்றிய தனது ஓர்மையை நாவல் நெடுகிலும் வெளிப்படுத்துகிறார்.
சம்பவங்களும் விவாதங்களும் மனவோட்டங்களும் ஞாபகங்களுமாகப் பல வண்ணங்களுடன் நெய்யப்பட்டிருக்கிறது இந்நாவல்.
காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு காலகட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது.
நவீன அரசியல், நவீனத் தொழில்நுட்பங்கள், நவீன சமூக நிறுவனங்கள் பற்றிய காந்திய அறம் சார்ந்த அணுகுமுறை மற்றும் ஆன்மீக, சமூக, அரசியல் நோக்கில் காந்தி ‘விடுதலை’குறித்துக் கொண்டிருந்த புரிதல், அவரது இயங்குதளம் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததின் முரண், ‘மகாத்மா’ என்னும் தெய்வ நிலையை நிலைகுலையச் செய்யும் விதமாக அவரது மகன் எடுத்திருந்த எதிர் நிலைப்பாடு ஆகியவை குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது.
உலகில் இதுவரை தோன்றிய கோட்பாடுகள், தத்துவங்கள் யாவுமே மானுடச் சிக்கல்களை முழுமையாகத் தீர்க்கவியலாத போதாமையுடன் இருப்பதையும் மாற்று அரசியல் குறித்த சிந்தனையில் காந்தியம் தவிர்க்க இயலாததாக ஆகியிருப்பதையும் சமீபகால யுத்த, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை உதாரணங்காட்டி முன்வைக்கிறது இந்நூல்.
1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது.