Your cart is empty.
அம்பையின் படைப்புகள்
அம்பையின் அனைத்து சிறுகதைகளையும் உள்ளடக்கிய மூன்று நூல்கள்.
ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் மேலும்
புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானதளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்கக் காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக, இரவுநேர விமானப்பயணம் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன. அப்படிப்பட்ட விமானப் பயணத்தைத் தொடர வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. பெரும்பாலானோர் இரவுநேர விமானப்பயணத்தை நிறுத்திவிட வேண்டுமென்றே கருதினர்; அதற்கான அழுத்தமும் கொடுத்தனர். ஆனால் விமான சேவையின் பொறுப்பாளரான ரிவியேர், அதனைத் தொடர வேண்டும் என்னும் முடிவில் உறுதியாக இருக்கிறார். இச்சூழலில், அன்றிரவு இயக்கப்பட்ட மூன்று விமானங்களில் ஒன்று விபத்துக்குள்ளாகிறது; எங்கோ விழுந்து நொறுங்கிவிடுகிறது. வீரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அதன் விமானி பரிதாபமாக உயிரிழக்கிறான்.
இப்போது என்ன செய்யப்போகிறார் ரிவியேர் என்ற கேள்விக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.
விமானிகளின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்நாவலில், ‘வினையாற்றுதல்’ குறித்த விவாதங்களும் விழுமியங்களும் முன்னிலைப்படுகின்றன. அதுவே இந்நாவலின் சிறப்பாகும்.
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப்பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும்செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது, இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒலித்த குரல்கள் எவை, பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் எவ்வாறு இத்திட்டம் கைவிடப்பட்டது என்பதை எல்லாம் ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில், விறுவிறுப்பான நடையில் இந்நூல் ஆராய்கிறது. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியின் பின்புலத்தை விளக்கிப் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார். நவீன தமிழகத்தின் சமூக-அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
தமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘தமிழகத்தில் அடிமைமுறை’ நூல் குறிப்பிடத்தகுந்தது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் அ.கா. பெருமாள், இந்த நூலில் அதைப் பெருமளவில் பாவித்திருக்கிறார். இந்நூலின் முன்னுரை அரிய பல செய்திகளைக் கூறுவது. தென்குமரியில் உள்ள சில சாதிகளைப் பற்றிய அரிய செய்திகளைக் கதைப்பாடல்கள் வழி மீட்டெடுத்திருக்கிறார் பெருமாள். கடின உழைப்பு நூலில் தெரிகிறது.
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் அக்கறை கொண்டோருக்குப் பயன்மிகுந்த ஒரு நூலைத் தேவகாந்தன் தந்திருக்கிறார்.
இது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியப் பரப்பின் ஒரு முத்துக்குளிப்பு. எமது நாவல் இலக்கியக் கையிருப்பையும் அதன் தாரதம்மியத்தையும் ஒருசேரத் தொகுத்தளித்திருக்கும் பெரும் படையல். ஒரு சிருஷ்டி எழுத்தாளன் தேர்ந்த விமர்சகனாகவும் முகிழ்த்து, தனது வாசிப்பு என்ற உலைக்களத்தில் வார்த்தளித்த பனுவல் இதுவாகும்.
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க முனைகின்ற ஒவ்வொரு தருணத்தையும் அதன் வன்மம்சார்ந்து இக்கதைகள் நமக்குக் காட்ட முனைவதால் இத்தகைய ஆன்ம பலம் நம்மில் உண்டாகிறது.
வண்ணநிலவனின் மனிதர்கள் எளிமையானவர்கள். ஆனால் நம் பார்வையின் எல்லைக்குள் அவர்கள் தென்படுவதில்லை. இவர்களின் துயரங்களைக் கணிப்பதற்கான படைப்பாற்றலை வண்ணநிலவன் கொண்டிருப்பது தமிழ் இலக்கியத்தின் பேறு.
இத்தகைய அரிய மனிதர்களின் வாழ்வை அதே தொனியில் மாற்றும்போது, படைப்பின் வலிமை குன்றிவிடலாகாது. எனினும் அதற்கான கவன ஈர்ப்பை
மனத்தில் கொள்ளாது இயல்பாகத் தன்னை மேலெழுப்பிக்கொள்வதில்தான் வண்ணநிலவனின் படைப்பாற்றல் ஒளிர்வதாக உணர்கிறேன்.
மேலே கூறப்பட்டவற்றிற்குச் சான்றுபகரும் கதைகளே இவை.
ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொண்ட நேர்மையான, சாத்வீகமான தொடர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல்.
அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனது உறவினர்களின் நேரடியான, மறைமுகமான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும், ஒரு பெண் என்பதனால் தான் அடைந்த அவமானங்களையும் பொருட்படுத்தாமல், நீரின்றித் தவித்தலைந்த தலித் மக்களின் தாகம் தணிக்க மேற்கொண்ட அறப்போராட்டத்தை மிகையேதுமின்றி, சரளமான நடையில் இந்நூலில் பதிவு செய்துள்ளார் இந்திரா.
“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சட்டநாதன், கல்வியைப் பெறுவதிலும் தகுந்த வேலையை அடைவதிலும் நடத்திய போராட்டமே இந்த நூல். முழுமையடையாத இந்தச் சுயசரிதையை சட்டநாதன் விவரித்துச் செல்லும்போது, எந்தவொரு வறிய, பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த குழந்தையின் போராட்டமாகவும் புத்தகம் விரிகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் சிவில் சர்வீஸ் உயரதிகாரியாக இருந்த ஏ.என். சட்டநாதன், தமிழ் நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராகவும் விளங்கினார்.
தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.
ச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித்தன. லட்சிய வானிலிருந்து அவர் நிதர்சனப் புழுதிக்கு வந்து சேர்ந்தார். அவருக்குத் தார்மீகக் கோபம் சுர்ரென்று ஏறிற்று. கடைசியாக எழுதியிருக்கும் கவிதையில், ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று எழுதினார். ‘மயில் இறகு போடாது / நவபாரதம் பிறக்க / தூக்கு மரம் தேவை’ என்று எழுதினார். போகிற போக்கைப் பார்த்தால் நக்சலைட்டுகளுக்கும் அவருக்குமான இடைவெளி மிகக் குறைந்துவிடும் என்று கூடத்தோன்றிற்று.
சுந்தர ராமசாமி
முன்னுரையில்
ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுகின்றன. அவரது நவீன தமிழ் நடையழகு மனதைத் தொடுகிறது. ந.பி.யை இவ்வளவு துல்லியமாக யாரும் மதிப்பிட்டதில்லை என்ற உணர்வு புஸ்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படுகிறது.
உணர்வும் அறிவும் வெகு அற்புதமாக இக்கட்டுரைகளில் லயப்பட்டிருக்கின்றன. இந்த லயத்தைச் சொற்களால் விவரிக்க முடியாது. அனுபவத்தால்தான் உணர முடியும். தன் அழகுணர்ச்சியையும் சிந்தனையையும் தூண்டிய எரிய வைக்கும் பகுதிகள் ஏராளம். விமரிசனம் என்பதே ஒரு விதமான வறட்டுத்தனம் கொண்டதுதான். இந்த வறட்டுத்தனத்தை அருகில்கூட வரவிடாமல், மிகுந்த கலை நயத்தோடு புஸ்தகத்தை எழுதியிருக்கிறார் சு.ரா.
வண்ணநிலவன்
சுபமங்களா
நம்பகமான தகவல்கள் கொண்ட ஜார்ஜ் ஜோசப் குறித்த முதல் தமிழ் நூல். இருவர் (ஜார்ஜ் ஜோசப் - ராஜாஜி) கலந்து யோசித்ததே, பெரும்பாலும் நமது ஹிந்துஸ்தானத்தின் காங்கிரஸ் வேலைத்திட்டமாய் அமையப்பெற்றது என்றும் சொல்லுவதற்கு இடமுண்டு, சீரங்கக் கூட்டத்தில், ஆச்சாரியார் சொன்னதை மற்றவர்கள் எளிதிலே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், ஜோஸப்போ வாக்கியத்துக்கு வாக்கியம் வாதம், சண்டை, குஸ்தி போட்டார். எல்லாம் வாயால்தான். கடைசியில் சமாதானம். ஆச்சாரியாரின் தெள்ளறிவு ஜோஸப்பின் மேதையை ஒப்புக்கொண்டது. ஜோஸப்பின் கட்டுக்கடங்காத கருத்துகள், ஆச்சாரியாரின் தர்க்கப் பாதுகாப்புகளை வேண்டின. பொன் மலர் நாற்றமுடைத்துப்போல இருவரும் ஒன்றுசேர்ந்து, தமிழ்நாட்டில் பிரகாசத்துடன் ஜொலித்தார்கள். - வ.ரா.
தமிழ் இலக்கிய ஆய்வில் ‘ஒப்பியல் இலக்கியம்' எனும் துறையில் அறிவியல் கண்ணோட்டத்தில் புதிய திசையிலான ஆய்வை நிகழ்த்தியவர் தமிழ் அறிஞர் க. கைலாசபதி.
ஒப்பியலின் கோட்பாடுகளைத் தெளிவாக முன்வைக்கும் கைலாசபதி பாரதிமுதல் மேனாட்டுக் கவிஞர்கள்வரை பலரது ஆக்கங்களைப் பற்றிய புதிய பார்வைகளை முன்வைத்துள்ளார். கிரேக்கம், சுமேரியா, வடமரபு எனப் பரந்த அளவில் விரிந்து செல்லும் இவரது தேடல் தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடி. இந்நூலின் சரளமான நடை ஆய்வு மாணவர்களை ஈர்க்கும்.