Your cart is empty.
ஏ. கே. ராமானுஜன்
பிறப்பு: 1929
இந்திய மொழிபெயர்ப்பு உலகில் முக்கியமான பெயர் ஏ.கே.ராமானுஜன். பிறப்பு மைசூரில் 1929. இறப்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1993. மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ பட் டம் பெற்ற ராமானுஜன், பூனாவிலும் கல்வி கற்று, பின் அமெரிக்காவின் இண்டியானா பல் கலைக்கழகத்தில் பிஹெச்டி பெற்றார். சிலகாலம் மதுரைப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய வர். சுமார் முப்பதாண்டுகள் சிகாகோ பல் கலைக்கழகத்தின் ஆசியவியல் துறையில் திரா விடமொழிப் பேராசியராகப் பணிபுரிந்தார். கன் னட நவ்ய இலக்கிய இயக்கத்தின் வித்தியாச மான தொனிக்குச் சொந்தக்காரர். ஹொக் களல்லி ஹூவில்ல [தொப்புளில் பூ இல்லை (1969)], மத்து இதர பத்யகளு [மற்றும் இதரக் கவிதைகள் (1977)], குண்டோபில்லெ ளபாண்டியாட்டம் (1990)] இவை ராமனுஜனின் கன்னடக் கவிதைத் தொகுதிகள்; The Striders, Relations ஆங்கிலக் கவிதைத் தொகுதிகள். இன்னொருவனின் சுயசரிதை (1978) இவரது கன்னடக் குறுநாவல். தன் மனைவி Molly ஆங்கிலத்தில் எழுதிய Yellow Fish இந்திய அரசின் பத்மஸ்ரீ, (காலமனான பின்) மையச் சாகித்திய அகாதமி விருது இவர் பெற்ற கீர்த்திகள்.
கன்னட இலக்கிய உலகத்துக்கும் கர்நாடக அறிவுஜீவிகள் பலருக் கும் உந்துசக்தியாக விளங்கியவர். அனந்தமூர்த்தி, சந்திரசேகர கம் பார், கீரம் நாகராஜ் போன்றவர்கள் ராமானுஜனைத் தங்கள் குரு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ராமானுஜன் கன்னடத்தில் எழுதியுள்ள ஒரே சிறுகதை அண் ணையனின் மானுடவியல். சிறந்த கன்னடச் சிறுகதைகளை யார் தொகுத்தாலும் அதில் இடம்பெறும் கதை இது. பழமையை விமர் சிக்கும் நவ்யக் குரலின் எடுப்பான வெளிப்பாடு இக்கதை. வாசிப் பவரை மானுடவியலின் அர்த்தத்தை மற்றொரு பரிமாணத்தில் தேடச் செய்வது இக்கதையின் வெற்றி.குறுநாவலைக் கன்னடத்தில் மொழிபெயர்த்த ராமானுஜன் கன் னடம், தமிழிலிருந்து ஏராளமாக ஆங்கிலப்படுத் தியுள்ளார். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல 24 The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology (1967), Speaking of Siva (1973), Hymns for the Drown-ing Poems for Vishnu by Nammalvar (1981). மற்றொரு முக்கியமான நூல் Folk Tales from India.
