Your cart is empty.
அகிலா
பிறப்பு: 1964
எழுத்தாளர், திறனாய்வாளர், பேச்சாளர், ஓவியர். கோவையில் மனநல ஆலோசகராகப்
பணியில் உள்ளார்.
தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிவருகிறார். இதுவரை கவிதை,
சிறுகதை, நாவல், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என 20 நூல்கள்
வெளிவந்துள்ளன.
சக்தி விருது (2014), நெருஞ்சி இலக்கிய இயக்க விருது (2018), அசோகமித்திரன் நினைவு
இலக்கிய விருது (2019), சௌமா இலக்கிய விருது (2021), திருப்பூர் இலக்கிய விருது
(2021), இன்குலாப் நினைவு இலக்கிய விருது (2023) போன்ற பல விருதுகளைப்
பெற்றுள்ளார்.
இவருடைய ‘தவ்வை’ நாவல், ‘மண்சட்டி’ சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள் ஆகியவை
அரசு, தனியார் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கான மனநல ஆலோசனைகள் சார்ந்தும்
பெண் முன்னேற்றம், சமூக விழிப்புணர்வு சார்ந்தும் உரைகள் நிகழ்த்திவருகிறார்.
ஜிம் கார்பெட் எழுதிய ‘கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்’ என்னும் நூல்
இவரின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.
தொடர்புக்கு: artahila@gmail.com