Your cart is empty.
பீமன் நாத்
பிறப்பு: (-)
வானியல், விண்வெளி இயற்பியல் துறைகளின் அறிவியலாளர். அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை அங்கு முடித்துவிட்டு தில்லிப் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறையில் பட்டப் படிப்பு மேற்கொண்டார். அமெரிக்காவின் மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தில் வானியல் துறையில் பி.எச்.டி., ஆய்வுப்பட்டம் பெற்றார். தற்போது பெங்களூரில் ராமன் ஆய்வு நிறுவனத்தில் அறிவியலாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். பிரபஞ்சத்தில் பரவியுள்ள வாயுக்கள், விண்மீன் மண்டலங்களின் தோற்றம், விண்கதிர்கள் போன்றவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டுவருகிறார். அறிவியல் உண்மைகளை உலகிற்குத் தெரிவிப்பதில் ஆர்வம்கொண்ட இவர் பல நூல்களை எழுதியுள்ளார். விண் அறிவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்; ஆங்கில நாவலும் எழுதியுள்ளார். தற்போது பெங்களூரில் குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார்.