Your cart is empty.
ஹெச். நாகவேணி
பிறப்பு: 1963
ஹெச். நாகவேணி
நாகவேணி பிறந்தது தென்கர்நாடகத்தில் துளு பேசும் பகுதியைச் சேர்ந்த ஹெவுன்ன கச்சியின் ஒரு விவசாயக் குடும்பத்தில். தகவல் மற்றும் நூலகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள நாகவேணி தற்போது ஹம்பியிலுள்ள கன்னடப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பணியாற்றுகிறார். இவரது முதல் நூலைக் கன்னடப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 1993இல் வெளி யான தன் முதல் சிறுகதைத் தொகுதியான நாக்கனே நீரு (நான்காம் தண்ணீர்) மூலம் நாகவேணி கன்னட இலக்கிய உலகில் பரவலாகத் தெரியவந்தார். காந்தி பந்த (காந்தி வந்தார்) 1997இல் வெளியான இவரது முதல் நாவல். சந்திரசேகர கம்பாரின் நாடகச் சாதனைகள் குறித்தும் நாகவேணி ஒரு நூல் எழுதியிருக்கிறார். இவர் எழுதியுள்ள மீயுவ ஆட்டம் (குளிக்கும் ஆட்டம்) என்னும் சிறுகதைத் தொகுப்பு 2005இல் வெளிவந்துள்ளது. தன் துறை சார்ந்த சில நூல்களையும் நாகவேணி எழுதியுள்ளார். கர்நாடக மாநிலச் சாகித்தியஅகாடமி விருது உட்படப் பல பரிசுகளை நாகவேணி பெற்றுள்ளார்.
தென்கர்நாடகத்தின் துளு பேசும் சூத்திர மக்களின் பண்பாட்டை நாகவேணி தன் எழுத்தில் சித்தரிக்கிறார். இது சிவராம காரந்த் தன் எழுத்தில் காட்டாத உலகம். ஏழைச் சூத்திரப் பெண்கள், மேல்ஜாதியைச் சேர்ந்த பணக் காரப் பெண்களையும் ஆண்களையும் எதிர்த்துப் போராடும் விதத்தையும் நாகவேணி நுட்பமான கதையாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
Address : Dr. H. Nagaveni, Deputy Librarian, Kannada Uni-versity, Vidyaranya 583 276, Hospet Taluk. Ph.: 08394 - 229311.
