Your cart is empty.
வீணா சாந்தேஷ்வரா
பிறப்பு: 1945
1945இல் பிறந்த வீணா சாந்தேஷ்வரா எம்ஏ (ஆங்கிலம்), எம்ஏ (கன்னடம்), மற்றும் பிஹெச்டி பட்டங்களைப் பெற்றவர். பெண்களின் பிரத்தியேகப் பிரச்சினைகளைக் கன்னட இலக்கியத்தில் பதிவுசெய்த முன்னோடிகளில் வீணா ஒருவர். ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் இவர் படைப்புகள். சமீபத்தில் இவரது ஒட்டுமொத்தக் கதைகளின் தொகுப்பும் வந்துள்ளது.
ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி மொழிகளிலிருந்து ஏராள மான கதைகளைக் கன்னடத்திற்கு மொழியாக்கம் செய்துள்ள வீணா ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். உலகக் கன்னட மாநாட்டுக்காக ஆதுனிக கன்னட ஸன்னகதெகளு (நவீனக் கன்னடச் சிறுகதைகள்) என்னும் தலைப்பில் கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். கர்நாடகச் சாகித்திய அகாடமிப் பரிசையும் மையச் சாகித்திய அகாடமியின் கௌரவ விருதையும் பெற்றுள்ள வீணா சாந்தேஷ்வரா. தார்வாடிலுள்ள புகழ்பெற்ற கர்நாடகா கலைக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
முகவரி - Dr. Veena Shantheshwar, I Cross, Sapthapura, Dharwad
580 001. Ph.: 08362447836.
