Your cart is empty.

இளங்கோ
பிறப்பு: ( - )
ஈழத்தின் அம்பனையில் பிறந்து தற்போது கனடாவின் ரொறொண்டோவில் வசித்துவருபவர். போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் தவிர, ‘டிசே தமிழன்’ என்னும் பெயரில் பல்வேறு இதழ்களிலும் இணையதளங்களிலும் கட்டுரைகளும் விமர்சனங்களும் பத்திகளும் எழுதிவருகிறார். இவரது ‘நாடற்றவனின் குறிப்புகள்’ நூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஏலாதி’ இலக்கிய விருதையும் (2008) ‘மெக்ஸிக்கோ’ நாவல் பிரபஞ்சன் நினைவு நாவல் போட்டியின் பரிசையும் (2019) பெற்றிருக்கிறது. இது இவரது ஒன்பதாவது நூல்.
தொடர்புக்கு:
Mail Id: elanko@rogers.com
Website: www.djthamilan.blogspot.com