Your cart is empty.
கணேஷ் தேவி
பிறப்பு: 1950
ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி மொழிகளில் எழுதிவருபவர் பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவ்
பல்கலைக்கழகத்திலும் திருபாய் அம்பானி தகவல் தொழில்நுட்பக்கழகத்திலும் ஆங்கிலப்
பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பாஷா ரிசர்ச் இன்ஸ்டியூட் (பரோடா), ஆதிவாசி அகாதமி(தேஜ்கத்) ஆகிய அமைப்புகளை நிறுவியவர். இந்தியாவில் ஆதிவாசிகள், நாடோடிச் சமூகங்கள்
மத்தியில் பல ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார். இந்தியாவிலுள்ள வாழும் மொழிகள்
அனைத்தையும் பற்றிய விரிவான ஆவணமாக்கல் (People's Linguis tic Survey of India (PLSI) –
இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு) பணிக்குத் தலைமைத் தாங்கியவர். இந்தப் பணியின்
பலனாக 50 தொகுதிகள் வெளிவந்தன. எழுத்துக்காகவும் சமூகப் பணிக்காகவும் பத்மஸ்ரீ, பிரின்ஸ்
கிலாஸ் விருது (Prince claus Award) லிங்குவாபேக்ஸ் விருது (Linguapax Award) ஆகிய
விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
‘After Amnesia’, ‘Of Many Heroes’, ‘Painted Words’, ‘A Nomad Called Thie’, வானப்பிரஸ்தா
(மராத்தி), ‘ஆதிவாசி ஜானே சே’ (குஜராத்தி) ஆகியவை இவருடைய பிரபலமான நூல்களில் சில.
சுதேசிக் கலாச்சாரங்கள், அறிவுச் செல்வம் ஆகியவை குறித்து ஆறு தொகுப்புகள் கொண்ட நூல்
தொடரின் இணை – பதிப்பாசிரியர் (இணை – ஆசிரியர்). சமூகச் செயல்பாட்டாளராகவும்
விளங்கும் இவர் நாடோடி இனக் குழுக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதற்கான
இயக்கத்தின் முன்னணியில் நின்று பங்காற்றியிருக்கிறார். எழுத்தாளர்கள், கலைஞர்கள்
ஆகியோருக்கான தக்ஷிணாயண் இயக்கத்தை அண்மையில் தொடங்கியிருக்கிறார். தற்போது
கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாட் என்னும் ஊரில் வசித்துவருகிறார்.
தொடர்புக்கு: ganesh_devy@yahoo.com