Your cart is empty.
கங்கா பாஸ்கரன்
பிறப்பு: 1972
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2007ஆம் ஆண்டு சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார். தற்போது சிங்கப்பூரில் வசித்துவருகிறார். முதுநிலைப் பட்டப்படிப்பிற்காகச் சிவசங்கரியின் ‘இனி’ நாவலைத் திறனாய்வு செய்துள்ளார். நிறைஞர் பட்டப்படிப்பிற்காகப் ‘புறநானூறும் நட்பும்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார். சிங்கப்பூர் ‘Commendation’ விருதும் பெற்றுள்ளார்.
2023ஆம் ஆண்டு தேசியக் கலைகள் மன்றம் நடத்திய தங்க முனை விருதில் கவிதைப் பிரிவில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வருடந்தோறும் நடத்தும் முத்தமிழ் விழாச் சிறுகதைப் போட்டியில் இரண்டு முறை இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன. கவிமாலை அமைப்பினருடைய மாதந்தோறும் நடைபெறும் கவிதைப் போட்டியிலும் கவிதைகள் பரிசு பெற்றுள்ளன. இவரது கவிதைகள் தமிழகத்தின் செம்மலர் இதழிலும் நுட்பம், வலசை இணையப் பக்கத்திலும் கவிமாலை அமைப்பின் கவிதைத் தொகுப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் தமிழ்முரசு நாளிதழ், சிராங்கூன் டைம்ஸ், மக்கள் மனம் பத்திரிகை முதலியவற்றில் இவருடைய கவிதைகளும் கதைகளும் வெளியாகியுள்ளன. கல்வி தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை உள்நாட்டு, வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார்.
மின்னஞ்சல்: gangesnathi@gmail.com