Your cart is empty.
பூர்ணச்சந்திர தேஜஸ்வி
பிறப்பு: 1938
1938ஆம் ஆண்டு சிவமொக்க மாவட்டத்தின் குப் பள்ளியில் பிறந்த தேஜஸ்வி மைசூர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. (கன்னடம்) படித்தவர். கர்நாடகத்தின் சிக்மகளூர் மாவட்ட மூடுகரெயில் தன் எஸ்டேட்டில், இயற்கை விவ சாயத்தையும் ஜப்பானின் ஃபுகுவோகா மாதிரி யையும் அனுசரித்தபடி வாழும் தேஜஸ்வி, ஒரு பன்முகத் திறனாளி. இலக்கியம், பறவை களையும் விலங்குகளையும் ஊன்றிக் கவனித்தல், அவைகளைப் புகைப்படமெடுத்தல், சுற்றுச் சூழல் பற்றிய அக்கறை, புத்தகப் பதிப்பு, கணிப் பொறி, சமூகப் போராட்டங்கள் எனப் பரந்து விரிகிறது இவர் உலகம்.
ஏராளமாக எழுதியுள்ள தேஜஸ்வியின் நூல்களில் ஒரு கவிதைத் தொகுதி, ஒரு நாடகம், நான்கு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு நாவல் கள், பல கட்டுரைத் தொகுதிகள் அடக்கம். இயற் கை விவசாயம் தொடர்பாக இவர் எழுதியுள்ள நூல் பல பதிப்புகளைக் கண்டுள்ளது.
கர்நாடகத்தின் ராஷ்ட்ர கவி குவெம்புவின் மகனான தேஜஸ்வி தனித்த இலக்கிய அடையா ளம் கொண்டவர். லோஹியாவாதி.
தன் சிதம்பர ரகஸ்யம் நாவலுக்காகக் கர்நாடக மாநிலச் சாகித்திய அகாடமிப் பரிசு (1985), மத்திய சாகித்திய அகாடமிப் பரிசு (1987) பெற்ற தேஜஸ்வி, 2001இல் கர்நாடக மாநிலத்தின் மிக உயரிய இலக்கிய விருதான பம்ப விருது பெற்றார்.
திரைப்படமான இவரது கதைகள்: குபி மத்து இயாலா, அபச்சூரின போஸ்ட்டாஃபீஸ், தபரண கதெ. இப்போது இவரது நாவலான ஜுகாரி கிராஸ் திரைப்படமாகிறது. அபச்சூரின போஸ்ட்டாஃபீஸ், தபரண கதெ மாநில, தேசிய விருதுகள் பெற்றன.
இளமையிலிருந்தே தேஜஸ்விக்கு வாழ்வின் ஒரு பகுதியான இயற்கை அவர் எழுத்திலும் ஒரு பகுதியாகியுள்ளது.
