Your cart is empty.

ம.பெ. சீனிவாசன்
பிறப்பு: 1943
வைணவப் பனுவல்களில் ஆழ்ந்த புலமை, தமிழ்ச் செவ்விலக்கிய நீள்பரப்பில் சிறந்த அறிவு, நவீனத் தமிழிலக்கியப் பரிச்சயம், பக்தி இலக்கியங்கள்மீது தனித்த பார்வை, சமூக ஓர்மை, இயல்பான தமிழ்நடை இவை ஒருசேர அமையப்பெற்ற தமிழறிஞர் முனைவர் ம.பெ. சீனிவாசன்.
ம.பெ.சீ., சிவகங்கை மாவட்டம் சேந்தி உடையநாதபுரத்தில் பிறந்தவர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் கற்றார். தமிழார்வம் காரணமாக மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர் பட்டம், முனைவர் பட்டம்.
சென்னை து.கோ. வைணவக் கல்லூரி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக்கல்லூரி இவற்றில் 34 ஆண்டுகள் பணி.
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக எழுதிவருகிறார். 23 நூல்கள் எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ‘திருமங்கையாழ்வார் மடல்கள்’ 1987இல் வெளியானது. சாகித்ய அகாதெமி, இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் ‘பெரியாழ்வார்’, ‘குலசேகராழ்வார்’, ‘முதலாழ்வார்கள்’ ஆகிய நூல்களையும், ‘திவ்வியப் பிரபந்த பாசுரத் தொகுப்பு’, ‘கார்மேகக் கோனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுப்பு’ ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. வைணவ அறிஞர் பி.ஆர். புருஷோத்தம நாயடு பற்றிய நூலொன்று அதன் வெளியீடாக வரவிருக்கிறது.
இவரது நாலாயிரத் திவ்வியப் பிரபந்த ஆய்வுப் பதிப்பை இரு தொகுதிகளாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பிடத் தகுந்த வேறு நூல்கள்: ‘ஆழ்வார்களும் தமிழ் மரபும்’, ‘கம்பனும் ஆழ்வார்களும்’, ‘ஒருநாள் ஒரு பாசுரம்’, ‘இராமாநுசர்’.
மனைவி தேவகி (காலமாகிவிட்டார்). ஒரு மகன், ஒரு மகள்.
மகனோடு மதுரையில் வசித்துவருகிறார்.
தொடர்பு எண்: 9842436640