Your cart is empty.
ச. மோகனப்ரியா
பிறப்பு: 1982
தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 16 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனது கணவர், மகளுடன் வசிக்கிறார். பூர்வீகம் கோயம்புத்தூர்.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வரும் இவருக்கு சிங்கப்பூர் புத்தக வாரியம், தேசியக் கலைகள் மன்றத்துடன் ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியான தங்க முனை விருதுகள் கவிதைக்காக இரு முறையும் சிறுகதைக்காக ஒரு முறையும் வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
‘ஞாபகப் பெருங்களிறு’ என்கிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2023இல் வெளிவந்துள்ளது. இக்கவிதைத் தொகுப்பு, சிங்கப்பூர் இலக்கியப் பரிசு 2024க்கான சிறந்த அறிமுகப் படைப்புப் பிரிவின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.
தொடர்புக்கு: mohanapriyawrites@gmail.com