Your cart is empty.
அருண் எழுத்தச்சன்
பிறப்பு: 1982
1982 மே மாதம் 27ஆம் தேதி கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், திருவில்வாமலை பஞ்சாயத்து, குத்தாம்புள்ளி கிராமத்தில், ‘காட்டுமூச்சிக்கல்’ வீட்டைச் சேர்ந்த ஜெயகோவிந்தனுக்கும் கீதாவுக்கும் மகனாகப் பிறந்தார். 2002முதல் மூன்றுவருடகாலம் மலையாள நாளிதழ் ‘மாத்ருபூமி’யின் பிராந்திய நிருபராக இருந்தார். 2005முதல், ‘மலையாள மனோரமா’ தினசரியில் பணியாற்றிவருகிறார். இப்போது அதன் பத்தனம்திட்ட அலுவலகத்தில் முதுநிலை நிருபர். கர்நாடகத்தில் உள்ள தேவதாசிகளின் நிலையைக் குறித்த தனது ஆய்வுக்கு, ‘நேஷனல் பவுண்டேஷன் ஃபார் இந்தியா’வின் 2016–17 வருடத்துக்கான, தேசிய ஊடக ஆதாரவூதியம் (National Media Fellowship) பெற்றிருக்கிறார். இந்த நூல், 2019இல் சிறந்த பயண இலக்கியத்திற்கான கேரள அரசின் விருதைப் பெற்றுள்ளது.
அலைபேசி: 8547581709