Your cart is empty.
சுஜந்தன்
பிறப்பு: 1982
சுஜந்தன் (பி. 1982)
பத்தினியன் சுஜந்தன் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்பூர் பிரதேசத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை தி/சம்பூர் மகாவித்தியாலயத்தில் பயின்று இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புத் துறையில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். 'மறுக்கப்பட்ட நியாயங்கள்' (2006) இவரது முதலாவது கவிதைத் தொகுதி. பத்திரிகைகள், சஞ்சிகைகள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் தொடர்ந்து எழுதி வரும் இவர் 2006 ஏப்ரலில் ஏற்பட்ட யுத்தத்தின்போது தனது ஊரில் இருந்து இடம்பெயர்ந்து இன்றுவரை அகதிமுகாமில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.