உமா மகேஸ்வரி(1971)
மதுரையில் 9.11.1971இல் பிறந்து போடிநயக்கனூரிலுள்ள திருமலாபுரம் என்னும் இடத்தில் வளர்ந்து, தற்போது ஆண்டிப்பட்டியில் வசித்து வருகிறார். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றவர். ‘நட்சத்திரங்களின் நடுவே’ (1990), ‘வெறும் பொழுது’ (2002), ‘கற்பாவை’ (2004), ஆகிய கவிதை நூல்களும் ‘மரப்பாச்சி’ (2002), ‘தொலைகடல்’ (2004) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் ‘யாரும் யாருடனும் இல்லை’ (2003) என்ற நாவலும் வெளிவந்துள்ளன.
கணவர்- சங்கரபாண்டியன், குழந்தைகள்- செண்பகப் ப்ரதிஜா, சுஜய் குமரன்.