Your cart is empty.
ஷாலின் மரிய லாரான்ஸ்
பிறப்பு: 1983
ஷாலின் மரிய லாரன்ஸ் (பி. 1983)
எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். சொந்த ஊர் சென்னை. கற்றது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி; தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். தற்போது குமுதம் வார இதழில் ‘மனதைப் புண்படுத்தும் பக்கங்கள்’ என்கிற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதிவருகிறார். ஆங்கில, தமிழ் நாளிதழ்களிலும் மின்னிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் அரசியல், பெண்ணியம், சமூகம், தலித்தியம், சினிமா, கலை ஆகியவை குறித்து எழுதியும் பேசியும் வருகிறார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழகப் பெண்களுக்குப் பெண்ணியம், தலைமைப் பண்புகள் குறித்த பயிற்சிகளையும் கடந்த ஐந்து வருடங்களாக அளித்துவருகிறார். ‘வடசென்னைக்காரி’ (2019), ‘ஜென்சி ஏன் குறைவாகப் பாடினார்?’ (2019) ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. இது இவரது மூன்றாவது கட்டுரைத் தொகுப்பு.
முகவரி : 144/93 பிபி சாலை,
பெரம்பூர்,
சென்னை-600039
கைப்பேசி : 97910 12329
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் மேலும்