Your cart is empty.
புர்ஹான் ஸென்மெஸ்
பிறப்பு: 1965
புர்ஹான் ஸென்மெஸ் ஐந்து நாவல்கள் எழுதியுள்ளார். விருது பெற்ற இவரின் நாவல்கள் பிரெஞ்சு, ஜெர்மெனி உள்ளிட்ட நாற்பதுக்கும் அதிகமான மொழிகளில் வெளிவந்துள்ளன. துருக்கியில் பிறந்தார். வீட்டில் பேசுவது இரண்டு மொழிகள்- துருக்கி, குர்திஷ். இஸ்தான்புல்லில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். அரசியல் காரணங்களுக்காக இங்கிலாந்து சென்ற அவர் சுமார் 10 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டவராக அங்கேயே வாழ்ந்தார். The Guardian, Der Spiegel, Die Zeit, La Repubblica ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். வில்லியம் ப்ளேக் எழுதிய ‘The marriage of Heaven and Hell' என்ற கவிதை நூலைத் துருக்கியில் மொழிபெயர்த்துள்ளார். செப்டெம்பர் 2021இல் சர்வதேச பென் அமைப்பின் (International Pen Club) தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Vaclav Havel இலக்கிய விருது, EDRD இலக்கியப் பரிசு உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இஸ்தான்புல்லிலும் கேம்ப்ரிட்ஜிலுமாக மாறி மாறி வசித்துவருகிறார்.