Your cart is empty.
வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம்
பிறப்பு: 1966
வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் (பி. 1966)
ஸ்ரீராம் இங்கிலாந்தில் பிறந்து சென்னையிலும் கல்கத்தாவிலும் கல்வி கற்றார். பொறியியலில் பட்டம் பெற்றவர். பின்னர் எம்.பி.ஏ. பட்டம் பெற்று விளம்பரத்துறையில் பணியாற்றினார். அதன்பிறகு குடும்பத் தொழிலான Industrial Hydraulics and Software இல் இணைந்துகொண்டார். ஆறு வயதிலிருந்தே கர்நாடக இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். இசை வரலாற்றையும் ஆர்வத்துடன் கற்றார். பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்துடன் இணைந்து இசைக்கான இணையதளம் நடத்தினார். பின்னர் இருவரும் சேர்ந்து இசை பற்றி குவிஸ் புத்தகம் ஒன்றை உருவாக்கினார்கள். இசை பற்றி சுருதி, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் எழுதிவருகிறார். தற்போது சுருதியில் ஆசிரியர் குழுவிலும் பங்களித்து வருகிறார்.
மனைவி: சாரதா. மகன்கள்: அவினாஷ், அபிநவா
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தேவதாசியும் மகானும் (பெங்களுரு நாகரத்தினம்மா - வாழ்வும் காலமும்)
-‘நாகரத்தினம்மா நமக்கு விட்டுச் சென்றிருப்பதுதான் என்ன? வாழ்க்கைத் தரத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேலும்