Your cart is empty.
சுரிந்தர் எஸ். ஜோத்கா
பிறப்பு: 1952
புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக முறைகள் பயிற்று மையத்தில் (Centre for the Study of Social Sys tems) பேராசிரியராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
சுரிந்தர் ஜோத்கா, வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பல்வேறு சமூகவியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். சாதி, வேளாண்மை, கூட்டுறவு, தொழில் முனைதல், தலித் பிரச்சினை, சமூக மாற்றம், அரசு நிர்வாகம் முதலான பல்வேறு களங்களில் ஆய்வுகள் மேற்கொண்டவர்.
இவரது ஆய்வுகளில் அரசு அதிகாரம், ஊழல், அரசியலைக் களைதல் (1995), கடன், சார்ந்திருத்தல், வேளாண்மையில் மாற்றங்கள் (1995), இந்தியக் கிராமங்களை நூல்களிலிருந்து அறிந்துகொள்ளுதலும் களப்பணி மூலம் புரிந்துகொள்ளுதலும் (1998), இந்தியாவில் பண்பாடும் அரசியலும் பற்றிய சமகாலச் சொல்லாடல்கள் (2001), தேசமும் கிராமமும் (2002), சாதியும் தீண்டாமையும் (2002), பஞ்சாபில் சாதிகளின் கொந்தளிப்புகள் (2003), சமகால வேளாண் தொழிலின் நெருக்கடிகள் (2006), வேளாண் தொழிலின் அமைப்பு முறைகளும் அவற்றின் மாற்றங்களும் (2003) முதலானவை முக்கியமான ஆய்வுகளாகும். கிராம சமுதாயம் (2012) எனும் நூலினைப் பதிப்பித்திருக்கிறார். சுரிந்தர் ஜோத்காவின் பட்டறிவை மைய மாநில அரசுகள் பயன்படுத்தியுள்ளன.