Your cart is empty.
வசுதேந்த்ரா
பிறப்பு: 1969
பல்லாரி மாவட்டத்தின் சந்டூரில் 1969இல் பிறந்த வசுதேந்த்ரா, தனது முதல்நிலைப் பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்தார். NITK சூரத்கல்லில் பொறியியலிலும் IISC பெங்களூரில் எம்.ஈ.யிலும் பட்டம் பெற்றுள்ளார். இருபதாண்டு காலம் மென்பொருள் துறையில் வேலை செய்து, இப்போது தனது நேரத்தைப் பயணம் செய்வதிலும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் பயன்படுத்துகிறார்.
சாகித்ய அகாதெமி புத்தக விருது, தா.ரா.பேந்த்ரே கதை விருது, மாஸ்தி கதை விருது, டாக்டர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி விருது, பெஸகரஹள்ளி ராமண்ணா விருது, வசுதேவா பூபாளம் தத்தி நிதி விருது, வர்தமான உதயோன்முக விருது, சேடம் ‘அம்மா’ விருது, கதாரங்கம் விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘சந்தா புத்தகம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி, அதன் வழியாக நாட்டின் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன், புத்தகத்தை அச்சிடுவதுடன் அவற்றின் விற்பனையையும் அவரே மேற்பார்வை செய்கிறார்.
பயணத்தில் விருப்பமுள்ள இவர் மேற்குத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பல மலைகளிலும் தாஞ்சனீயா நாட்டின் கிளிமஞ்சாரோ மலையிலும் ஏறியிருக்கிறார். திபெத்தில் இருக்கும் கைலாசாவிலும் மானச சரோவரிலும் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். ஸ்குவாஷ் விளையாடுவது, மகாபாரத அத்தியயனம் செய்வது, சாஸ்திரீய சங்கீதம் கேட்பது ஆகியவற்றில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
பல புனைவுகளையும் அபுனைவுகளையும் வெளியிட்டுள்ளார்.