Your cart is empty.
இரவி அருணாசலம்
பிறப்பு: 1960
யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்று, 1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று, 1986இல் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் 1988இல் தொடங்கி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரங்கியல் பயின்று, 1992இல் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். 1995இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் பட்டம் பெற்றார். பத்து வருட காலம் இலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
புதுசு, சரிநிகர், புலம், ஐபிசி தமிழ் பத்திரிகை, ஒரு பேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழு உறுப்பினர். ஐபிசி தமிழ் வானொலி (லண்டன்), டிடிஎன் தமிழ் ஒளி தொலைக்காட்சி (பிரான்ஸ்) ஆகிய ஊடகங்களில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இருபதாவது வயதில் எழுதத் தொடங்கி, இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். தற்போது லண்டனில் வசிக்கிறார்.
மனைவி: சுசீலா, மைந்தர்: சஞ்சயன், சஞ்சுதன்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பம்பாய் சைக்கிள்
இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் புகுந்த நாளிலிருந்து வெளியேறிய நாள்வரை, ஈழத்தின் மண்ணுக்கும் மேலும்
1958
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முற மேலும்
ஆயுதவரி
“இதை வாசிக்கிறபோது எனது ஆச்சரியம் இரவிக்கு இந்தக் கலை அமைவு எப்படிக் கை வந்தது என்பதுதான். நெஞ்ச மேலும்