Your cart is empty.

சுகதா போஸ்
பிறப்பு: பி. 1963
அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பிரபல வரலாற்றாய்வாளர் வில்லியம் ஹோவார்ட் கார்டினர் பெயரில் நிறுவப்பட்டுள்ள இருக்கையின் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்த அவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்தில் உள்ள புனித காத்தரீன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2001இல் கார்டினர் இருக்கை பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்பு அவர் டுஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் ராஜதந்திரத் துறையில் கற்பித்துவந்தார். குக்கென்ஹீய்ம் நிதி நல்கையைப் பெற்ற இவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புமிக்க ஜி.எம். ட்ரெவெல்யன் உரை நிகழ்வில் உரையாற்றியுள்ளார். நேதாஜியின் அண்ணன் சரத் சந்திர போஸின் பேரனான சுகாதா போஸ், ‘பெஸன்ட் லேபர் அண்ட் கலோனியல் காப்பிட்டல்’, ‘எ ஹண்ட்ரட் ஹாரிசன்ஸ்: தி இந்தியன் ஓஷன் இன் தி ஏஜ் ஆஃப் குளோபல் எம்பயர்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தெற்காசிய வரலாறு, அரசியல் ஆகியவை பற்றிய ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளார். தாகூரை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.