Your cart is empty.
சுநேத்ரா ராஜகருணாநாயக
பிறப்பு: 1954
சிங்களம், ஆங்கில மொழிகளில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள்,
மொழிபெயர்ப்பு நூல்கள் என எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் எழுத்தாளர்
சுநேத்ரா ராஜகருணாநாயக, இலங்கையைச் சேர்ந்தவர்.
ஊடகவியலாளர், ஊடக ஆலோசகர், ஆவணப்பட இயக்குநர், நாடகாசிரியர், நடிகர், சஞ்சிகை
ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வானொலி அறிவிப்பாளர், நாவலாசிரியர், கவிஞர்,
தியான ஆசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இதுவரையில் இலங்கையின் உயரிய
இலக்கிய விருதுகளான அரச சாகித்திய விருது, சுவர்ண புஸ்தக விருது, கொடகே இலக்கிய
விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இந்தியா முழுக்கப் பயணம் செய்து பல நகரங்களையும் கிராமங்களையும் விவரிக்கும் நூல்களை
எழுதியிருக்கும் இவர், திருவண்ணாமலையைக் களமாகக் கொண்டு நான்கு நாவல்களை
எழுதியிருக்கிறார். இவரது நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும்
வெளிவந்துள்ளதோடு இவரது படைப்புகள் பலவும் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, வியட்நாமிய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.