Your cart is empty.
வைதேகி
பிறப்பு: 1945
வைதேகி என்னும் பெயரில் எழுதும் ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
பிறப்பு 1945. பிகாம் பட்டதாரி. லங்கேஷ் முன்னிறுத்திய முக்கியமான கன்னடப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், மற்றும் குழந்தைகளுக்கான இலக்கியம் எனப் பலவகையான எழுத்துக்குச் சொந்தக்காரர். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகள், ஒரு நாவல், மற்றும் ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளார். வைதேகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளது. இருமுறை கதா விருது, கர்நாடக மாநிலச் சாகித்திய அகாடமி விருது, எம். கே. இந்திரா விருது எனப் பல பரிசுகளைப் பெற்றவர். இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, மராட்டி மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. நண்பர் பாவண்ணன் தமிழாக்கம் செய்த வைதேகியின் ஒரு சிறுகதை சிட்டுக் குருவியும் ராஜகுமாரனும் சுபமங்களாவில் வெளியானது.குடும்பத்தில் நிலவிய ஆணாதிக்கச் சூழலே வைதேகியின் படைப்பாற்றலை மலரச் செய்தது. வீட்டு ஆண்களின் எதிரில் கூடப் பெண்கள் நாற்காலியில் அமர்வதே தீரச் செயல் பாடாகும் குடும்பப் பின்னணியிலிருந்து எழுதவந்தவர் வைதேகி. சகோதரர்களுக்குத் தாராளமாகக் கிடைத்த சுதந்திரம் பெண்ணென்ற காரணம் தனக்கு மறுக்கப் பட்டதால் உண்டான பாதிப்பால், குடும்பத்துக்குள்ளிருந்து வெளியேற இயலாத பெண்களின் உளைச்சல்களை வைதேகி சித்தரித்துள்ளார். மன
சிட்டுக்குருவி முதலான ஜீவன்களையும் பெண்களின் குறியீடாக்கும் நுட்பமான பரிமாணங்களில் வெற்றிபெறும் கதையாடல் இவருடையது.
முகவரி : Vaidehi, Iruvanthige, Ananthanagara II Phase, Manipal
576 119. Ph.: 09448215697.
