Your cart is empty.
ஏ.என். சட்டநாதன்
பிறப்பு: 1905 - 1990
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 6.5.1905இல் ஆறுமுக நாயக்கர் - அயனம்மாள் தம்பதியரின் இரண்டாம் குழந்தையாகப் பிறந்தார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பயின்று 1926இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1928இல் அனைத்திந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் சுங்கம் மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டுப் பல முதன்மைப் பொறுப்புகளை வகித்து, சென்னை, கல்கத்தா, பம்பாய்,தில்லி முதலிய நகரங்களில் பணியாற்றினார். 1946 முதல் ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த பல குழுக்களில் இந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றினார். 1956இல் விருப்ப ஓய்வுபெற்றார். 1969இல் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு அமைத்த முதலாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான சில ஆங்கிலப் புத்தகங்களை எழுதினார் .19.6.1990இல் சென்னையில் காலமானார்.
