Your cart is empty.
ஆதவன்
பிறப்பு: 1942
கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றியபின் தில்லியில் உள்ள ‘நேஷனல் புக் டிரஸ்’டின் தமிழ்ப் பிரிவில் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவன், தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இவர் எழுதிய ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அக்காதெமி (1987) விருது வழங்கப்பட்டது. இவரது பலப் படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்ய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மனைவி: ஹேமலதா சுந்தரம் மக்கள்: சாருமதி, நீரஜா
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இரவுக்கு முன்பு வருவது மாலை
மனித மனத்தின் நுட்பமான அடுக்குகளைத் துல்லியமாகச் சித்தரிக்கும் ஆதவன் ஆண் பெண் உறவு நிலைகளையும் பல மேலும்
காகித மலர்கள்
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள் மேலும்
கருப்பு அம்பா கதை
நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் கள மேலும்