Your cart is empty.
அக்கமகாதேவி
கவித்துவத்தோடு கற்பனை ததும்பும் வசனங்களைப் படைத்த அக்கமகாதேவி பன்னிரண்டாம் நூற்றாண்டின் சைவ பக்திப் பரப்பில் ஊற்றாகப் பிறந்து பெருகியவர். கர்நாடகப் பகுதியில் ஷிமோகா மாவட்டத்தில் உடுதடி என்ற ஊரில் பிறந்த அவர் பத்து வயதிலிருந்தே குரு ஒருவரின் வாயிலாக சிவ வழிபாட்டுக்கு அறிமுகமானதாகத் தெரிகிறது. இறைவனான சென்னமல்லிகார்ச்சுனன்மீது அவர் சிறுவயதிலிருந்தே பிரேமையும் பக்தியும் கொண்டு அவனைக் கணவனாகவே மனத்தில் தரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அக்கமகாதேவியின் வசனங்களில் சென்னமல்லிகார்ச்சுனன் என்ற பெயரே கவி முத்திரை.
