Your cart is empty.
அனார்
பிறப்பு: 1974
அனார் (பி. 1974) இயற்பெயர் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். கிழக்கிலங்கை சாய்ந்தமருதுவில் பிறந்து வாழ்ந்துவருபவர். 2004இல் வெளிவந்த ‘ஓவியம் வரையாத தூரிகை’ என்ற முதலாவது கவிதை நூலுக்கு இலங்கை அரசின் சாஹித்திய விருதும் (2005), வடகிழக்கு மாகாண அமைச்சின் சாஹித்திய விருதும் (2005) கிடைத்தன. இரண்டாவது தொகுப்பான ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்புக்காக (2011) கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் கவிதை விருது வழங்கியது. 2013இல் விஜய் தொலைக்காட்சி நிறுவனம் (இந்தியா) இலக்கியத் துறைக்கான (சிகரம் தொட்ட சாதனைப் பெண்) விருதையும் ஸ்பாரோ அமைப்பு 2015ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதையும் வழங்கியுள்ளது. முகவரி : 542பீ, கபூர் வீதி, சாய்ந்தமருது, 16, 32280, இலங்கை. அலைபேசி : 0094772546569 மின்னஞ்சல் : anar_srilanka@yahoo.com anar.srilanka@gmail.com வலைப்பூ : anarsrilanka.blogspot.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பெருங்கடல் போடுகிறேன்
அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வ மேலும்
ஜின்னின் இரு தொகை
அகத்தின் மாயச் சூழல்கள் கவிதை களாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடைய மேலும்
எனக்குக் கவிதை முகம்
ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திர மேலும்
உடல் பச்சை வானம்
ஈழத்துக் கவிஞர் அனாரின் மூன்றாம் தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகளில் வெளிப்பட்ட அவருடைய கவிதை ம மேலும்