Your cart is empty.
அரசு அமல்ராஜ்
பிறப்பு: 1961
மாஞ்சோலைப் பகுதியிலிருந்து முதல் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்.இவர் தந்தை கா. ஆறுமுகம், தாயார் லூர்து அம்மாள் இருவரும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தொழிலாளர்கள். நாலுமுக்கு எஸ்டேட்டில் தொடக்கக் கல்வி பயின்ற இவர் அம்பாசமுத்திரம், நாசரேத், பாபநாசம் ஆகிய ஊர்களில் மேல் படிப்பு படித்து, சட்டக் கல்வியை மதுரை சட்டக் கல்லூரியில் முடித்தார். திருநெல்வேலியில் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞரான முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் இரா. ஆவுடையப்பனின் சட்டப் பட்டறையில் இளம் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1987ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார்.
மனைவி : அ. ஜாஸ்மா பீவி (ஆசிரியை)
மகன் : அ. அரசு சங்கத்தமிழ்
மகள் : அ. இலக்கியா