Your cart is empty.
ஆற்றூர் ரவிவர்மா
ரவிவர்மா மலையாள மொழியின் முன்னோடிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என்ற நிலைகளில் புகழ்பெற்ற ரவிவர்மா திருச்சூர் மாவட்டம் ஆற்றூரில் பிறந்தார். பெற்றோர் மடங்ஙர்ளி கிருஷ்ணன் நம்பூதிரி, ஆலுக்கல் மடத்தில் அம்மிணியம்மா. சாமூதிரி கல்லூரி, மலபார் கிறித்துவக் கல்லூரி (கோழிக்கோடு), பல்கலைக்கழகக் கல்லூரி (திருவனந்தபுரம்) ஆகியவற்றில் பயின்று மலையாள இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் வெவ்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். ‘ஆற்றூர் கவிதைகள்’ முழுத்தொகுப்பு. ‘புதுமொழி வழிகள்’ தேர்ந்தெடுத்துத் தொகுத்த கவிதை நூல். தமிழிலிருந்து ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, ‘ஒரு புளியமரத்தின் கதை’ (சுந்தர ராமசாமி), ‘நாளை மற்றுமொரு நாளே’ (ஜி. நாகராஜன்) ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (சல்மா) ஆகிய நாவல்களையும், ‘புது நானூறு’ (தேர்ந்தெடுத்த தமிழ்ப் புதுக் கவிதைகள்) ‘பக்தி இலக்கியம்’ (அ.அ. மணவாளன்) நூல்களையும் மலையாளத்துக்கு மொழிபெயர்த்தார். படைப்பாக்கத்துக்கும் மொழிபெயர்ப்புக்குமான சாகித்திய அகாதெமி விருதுகள் ஆற்றூருக்கு வழங்கப்பட்டன. கேரள சாகித்திய அகாதெமி விருது, ஆசான் நினைவுப் பரிசு, மகாகவி பி. குஞ்ஞிராமன் நாயர் விருது உட்படப் பல அங்கீகாரங்களையும் பெற்றார். மாநிலத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ‘எழுத்தச்சன் விருதை’ 2012இல் கேரள அரசு ஆற்றூருக்கு அளித்தது. எண்பத்தொன்பதாம் வயதில் 2019 ஜூலை 26 அன்று திருச்சூரில் மறைந்தார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஆற்றூர் ரவிவர்மா
நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அ மேலும்