Your cart is empty.
அழகிய நாயகி அம்மாள்
பிறப்பு: 1915
1915இல் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஈத்தாமொழி கிராமத்தில் பிறந்தவர். தந்தை இளையநாடன். ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உடன்பிறந்தவர்கள். அழகிய நாயகியின் சிறு வயதிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். பள்ளியில் ஏழாவதுவரை படித்தவர். துகிலுரிதல், அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, முத்துப்பட்டன் மாலை ஆகிய நாட்டுப்புற கலை இலக்கிய நூல்களைப் படித்தவர். மலையாளத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்.
இவருடைய கணவர் சிவ. பொன்னீலவடிவு. ஆசிரியராகப் பணிபுரிந்தவர் காந்தியவாதி. ஒரு மகன் பக்தவத்சலன் (எழுத்தாளர் பொன்னீலன்), இரண்டு மகள்கள். இரண்டு மகள்களும் திருமண வயதில் இறந்துவிட்டார்கள்.