Your cart is empty.
பா. தேவேந்திர பூபதி
பிறப்பு: 1969
பா. தேவேந்திர பூபதி (பி. 1969) வணிகவியலில் இளம்முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்ற பா. தேவேந்திர பூபதி, பழனியைச் சொந்த ஊராகக் கொண்டவர். ஓய்வுபெற்ற பஞ்சாயத்து ஒன்றிய ஆணையரான அ. பாஸ்கர சேதுபதிக்கும் தங்கத்துக்கும் முதலாவதாகப் பிறந்தவர். சங்க இலக்கியங்களையும் தத்துவங்களையும் ஆர்வமாகப் பயின்று அதன்வழியே நவீன கவிதைத் தளத்திற்குள் வந்திருக்கும் இவர், ‘கடவு’ இலக்கிய அமைப்பினை நிறுவிச் செயல்பட்டு வருகிறார். சிற்றிதழ்களில் பரவலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது ஏழாவது தொகுப்பு இது. முந்தைய தொகுப்புகள்: ‘பெயற்சொல்’, ‘வெளிச்சத்தின் வாசனை’, ‘அந்தர மீன்’, ‘முடிவற்ற நண்பகல்’, ‘ஆகவே நானும்’, ‘நடுக்கடல் மௌனம்’. மனைவி: கீதா, மகன்: விஜயேந்திர பூபதி மின்னஞ்சல்: devendhirapoopathy@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அந்தர மீன்
மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் சொற்களின் பின்னால் எப்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் பெயரற் மேலும்
நடுக்கடல் மௌனம்
சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப மேலும்
வாரணாசி
அகவெளியில் நீந்திப் போகும் பிம்பங்களைப் பற்றிப் பிடித்துக் கோத்துப் பின்னும் லாகவம் பூபதிக்குக் மேலும்
ஆகவே நானும் . . .
மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குற மேலும்
வெளிச்சத்தின் வாசனை
சமூக உறவுகள் தந்த அடையாளங்களின் மறுதலிப்பும் சுய அடையாளம் நோக்கிய தேடலும் மறுதலித்த அடை யாளங்களை மேலும்